பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் இளன் இயக்கியுள்ள படம் ஸ்டார். இந்த படத்தில் நடிகர் கவின் ஹீரோவாக நடித்துள்ளார். ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் இணைந்து ஸ்டார் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் ஸ்டார் படத்தின் பாடல், போஸ்டர்கள், புரோமோ வீடியோக்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இன்று (ஜனவரி 28) ஸ்டார் படத்தின் கதாநாயகியின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. She, ஆஷ்ரம் போன்ற பிரபலமான வெப் சீரிஸ்களில் நடித்த நடிகை அதிதி போஹன்கர் தான் கவினுக்கு ஜோடியாக ஸ்டார் படத்தில் ஜிமிக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் ஏற்கனவே தமிழில் அதர்வா நடிப்பில் வெளியான ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
இட ஒதுக்கீட்டுக்கு சாவுமணி அடிக்கும் யுஜிசி : ராமதாஸ் கண்டனம்!
”இந்த பலம் போதுமா?”: ஆஸ்திரேலிய வீரரின் ஆணவத்திற்கு… தக்க பதிலடி கொடுத்த கேப்டன்