அயோத்தியில் ‘ஆதி புருஷ்’ டீசர் வெளியீடு!

சினிமா

கதையின் நாயகனாக பிரபாஸ் நடித்திருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் படத்தின் டீசர் மற்றும் முதல் பார்வை போஸ்டரை அயோத்தியில் நடைபெறும் விழாவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தியில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஆதி புருஷ்’.

இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

2023 ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் டீசர், முதல் பார்வை போஸ்டரை,

அக்டோபர் 2ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் ராமர் பிறந்த இடமாக கூறப்படும் அயோத்தி நகர் அமைந்துள்ள  சரயு நதிக்கரையில்  நடைபெறவுள்ள விழாவில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார், பிரபாஸ் மற்றும் படத்தின் நாயகி கீர்த்தி சனோன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

“தீமைக்கும், நன்மைக்கும் இடையேயான போட்டி குறித்து, ராமாயணத்தை மையப்படுத்தி தயாரான இந்த திரைப்படம்,

உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்து மதம் சார்ந்த புனித நகரமாக கருதப்படும் ராமர் பிறந்த பூமியில், ஆதி புருஷ் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு நடைபெறுவது பொருத்தமானது” என்கிறார் இயக்குநர்.

இராமானுஜம்

உதயநிதி படத்துக்கு அவசரம் காட்டும் கமல் : புலம்பும் இயக்குநர்!

சினிமாவில் மொழி தடைகள் இல்லை : ஐஸ்வர்யா ராய்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *