‘ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே’ : சூர்யாவின் ‘கங்குவா’ பாடல்!

சினிமா

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டில் இனிவரும் மாதங்களில் வெளியாகவுள்ள திரைப்படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள படம் என்பதுடன் சூர்யா திரைவுலக வாழ்க்கையில் அதிக செலவு செய்யப்பட்ட படம் கங்குவா.

சூர்யா நடிப்பில் இரண்டு பாகமாக வெளிவர உள்ள முதல் படம் இது. சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை படக்குழு இன்று (ஜூலை 23) வெளியிட்டுள்ளது.

‘ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே, மாய நெருப்பே, மலை நெருப்பே’ என தொடங்கும் இப்பாடல் உடுக்கை சத்தத்துடன் உற்சாகத்தை ஏற்படுத்தி கேட்பவர்கள் தங்களை மறந்து ஆடவைக்கும் பாடலாக உள்ளது.

மலையக பிரதேசங்களில் தனித்து வாழும் இனக்குழுவின் பெருமையை பேசும் வகையிலான இப்பாடலில் பண்டைய கால மக்களின் பயன்பாட்டில் இருந்த உருமி, பம்பை மற்றும் நாட்டுப்புற தாள வாத்தியங்களின் சத்தம் அதிகம் ஒலிக்கிறது.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்தப் பாடலை கவிஞர் விவேகா எழுதியுள்ளார். வி.எம்.மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து பாடலை பாடியுள்ளனர்.

அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கங்குவா’ படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.

3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கங்குவா தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

தமிழ்நாடு மீது மத்திய அரசுக்கு காழ்ப்புணர்ச்சி : எடப்பாடி தாக்கு!

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு 2 புதிய உறுப்பினர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0