’போடா போடி’, ’நானும் ரவுடி தான்’, ’தானா சேர்ந்த கூட்டம்’, ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் விக்னேஷ் சிவன்.
இவர், பிரபல நடிகை நயன்தாராவை காதலித்து கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், ”கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி நடிகை நயன்தாராவுக்கும் தனக்கும் இரட்டை குழந்தை பிறந்துள்ளதாகவும், நானும் நயன்தாராவும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம்.
இரட்டை ஆண் குழந்தைகளால் ஆசிர்வதிக்கப்பட்டோம்” என்று தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.
அந்த அறிவிப்பு, ஒரு பக்கம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், மறுபுறம் அது எப்படி திருமணம் ஆகிய நான்கு மாதங்களில் குழந்தை பிறந்திருக்கும் என்ற கேள்வி தமிழகம் முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியது.
அந்த புயல் சற்றே அடங்கிய நிலையில், இன்று (அக்டோபர் 13 ) தன்னுடைய சமூக வலைதள பதிவின் மூலம் வேறு ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறார், விக்னேஷ் சிவன்.
தற்போது விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிப்பில் AK 62 என்ற பெயரிடப்படாத திரைப்படத்தை இயக்கிவருகிறார்.
இந்நிலையில், நடிகர் அஜித் புத்தருக்கு முன் நிற்கும் அழகிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ”A Storm before the calm” அமைதிக்கு முன் புயல் என்று கூறியுள்ளார். இந்த படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அஜித் ரசிகர்கள் சிலர் AK 62 படத்தின் அப்டேட் எப்போது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நயன் – விக்னேஷ் சிவன் குழந்தை விவகாரம்: விசாரணை தொடக்கம்!
பிக்பாஸ் வீட்டில் மீ டு புகாரில் சிக்கிய இயக்குநர்: கொந்தளிக்கும் நடிகை!