“மகளே என்று பேசினார், பின்னர் கூப்பிட்டார்!” மலையாள சூப்பர்ஸ்டார் மீது திலகன் மகள் குற்றச்சாட்டு!

மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும் ஹேமா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கேரளத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வந்த திலகன் . மலையாள திரையுலக சங்கமான அம்மா நிர்வாகிகளை திலகன் கடுமையாக விமர்சித்து வந்தார். மம்முட்டி, மோகன்லால் போன்றவர்களையும் திலகன் விட்டு வைக்கவில்லை. இதனால், அவரை படங்களில் நடிக்க தடையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் திலகன் மகளையே அட்ஜெட்மெண்ட்டுக்கு அழைத்ததாக தகவல் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து திலகன் மகள் சோனியா கூறுகையில், ”மலையாள திரையுலகில் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று நடிகைகளை டார்கெட் செய்து இயங்கி வந்தது. கடந்த 2010 ஆம் ஆண்டு எனது தந்தை தொடர்பான பிரச்னையின் போது, அவருடன் பேச்சுவார்தை நடத்த ஒரு குழு வந்தது.

அப்போது, கட்டடத்துக்கு வெளியே 62 பேர் கொண்ட குண்டர்கள் இருந்தனர். அப்போதும், என் தந்தை பயப்படவில்லை. அவர்களை பார்த்து மாபியா என்று கத்தினார். அம்மா அமைப்பின் விதிகளின்படி, பிரச்னைகளை வெளிப்படையாக பேசக் கூடாதாம். ஆனால், என் தந்தை அமைப்பில் நிலவிய பிரச்னைகளை தைரியமாக வெளிப்படையாக பேசினார்.

நானும் சிறு குழந்தை முதல் பல சினிமா தயாரிப்பாளர்களை பார்த்துள்ளேன். அவர்கள் என் தந்தையை பார்க்க வீட்டுக்கு வருவார்கள். ஆனால், ஒரு பிரச்னை எழுந்தால் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என் தந்தையை எதிர்ப்பார்கள். என் தந்தையின் மறைவுக்கு பிறகு, மலையாள திரையுலகின்  முன்னணி நடிகர் ஒருவர் என்னிடத்தில் போனில் பேசினார்.

முதலில் என் தந்தையை நடத்திய விதத்துக்கு மன்னிப்பு கேட்கும் வகையில் அவரின் பேச்சு இருந்தது. ’மோளே (மகளே) என்றுதான் என்னிடத்தில் பேசினார். பிறகு, அவரின் பேச்சு வேறுவிதத்துக்கு சென்றது. மகளே என்று பேசி விட்டு கூட இப்படி நடப்பார்களா ? என்று நான் நினைத்தே பார்க்கவில்லை.

இத்தனைக்கும் நான் மலையாள சினிமாவில் நடித்தது கூட இல்லை. அப்படியிருக்கையில், என்னிடம் கூட இப்படி நடந்து கொண்டுள்ளனர். எனவே, மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டியது அவசியமானது” என்று சோனியா கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன் 

அச்சுறுத்தும் ‘குரங்கு அம்மை’: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

மீண்டும் விர்ரென எகிறிய தங்கம் விலை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts