தேசிங்கு ராஜா 2 : பிரம்மாண்ட செட்… இவ்வளவு செலவா?
விமல் நடிக்கும் தேசிங்கு ராஜா 2 படத்தின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட பங்களா செட் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் விமல் நடிப்பில் வெளியான தேசிங்கு ராஜா படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை இயக்குநர் எழில் இயக்கி இருந்தார்.
தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் எழில் ‘தேசிங்கு ராஜா 2’ படத்தை இயக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த படத்திலும் விமல் தான் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம் இயக்குனர் எழில் இயக்கும் 25 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நடிகர்கள் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, புகழ், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஒரு பாடல் காட்சிக்காக கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.50 லட்சம் செலவில் ஒரு பிரம்மாண்ட பங்களா செட்டை படக்குழு உருவாகியுள்ளது.
தேசிங்கு ராஜா 2 என்ற படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும் முதல் பாகத்திற்கும் இந்த படத்திற்கு எந்த தொடர்பும் இல்லாமல் புது கதைக் களத்தில் தான் தேசிங்கு ராஜா 2 உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கனிமொழி, அண்ணாமலை வேட்புமனுக்கள் ஏற்பு!
சேலம் திமுக வேட்பாளர் மனு என்ன ஆகும்? டென்ஷனில் திமுக தலைமை