தன்னுடைய உடலில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகர் ரோபோ சங்கர்.
சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தன்னுடைய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் ரோபோ சங்கர், விஜய் தொலைக்காட்சியில் வெளியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர்.
அண்மையில் இவர் உடல் மெலிந்த தோற்றத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியானது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே அவருடைய உடல் நலத்திற்கு என்ன ஆனது என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில், தன்னுடைய உடலில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக ரோபோ சங்கர் Behind Talkies யூ டியூப் சேனலில் பேசியுள்ளார்.
அதில், “நான் ஆரம்பத்துல உடம்பு குறைக்கிறதுக்காகத்தான் டயட்ல இருந்தேன். ஆனா அந்த நேரத்துல எனக்கு எல்லாருக்கும் வருவது போல ஒரு நோய் வந்துச்சு, அது மஞ்சள் காமாலை தான். அதனால வேகமா உடம்பு குறைய ஆரம்பித்து விட்டது.
பிறகு நல்ல நேரமா எனக்கு நல்ல டாக்டர்கள் அமைஞ்சாங்க. அவங்க என்னுடைய உடம்ப நல்லா பாத்துக்கிட்டாங்க. அதோட என்னுடைய வீட்டிலும் எனக்கு நல்ல சப்போர்ட் கிடைச்சது.
என்னுடைய மனைவியா இருந்தாலும் சரி, என் குழந்தைகளாக இருந்தாலும் சரி, நல்ல நண்பர்கள் எல்லோருமே என்ன நல்லபடியா பார்த்துகிட்டாங்க. அதனாலதான் நான் இவ்வளவு சீக்கிரமா பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறேன்.
அதைவிட நான் இந்த மாதிரி திரும்புவதற்கு காரணம் நாலு மாசமா நகைச்சுவை நிகழ்ச்சிகளை மட்டும் தான் பாத்துக்கிட்டு இருந்ததுதான்.
நான் எத்தனை பேரையோ நகைச்சுவையாக பேசி அவங்களுடைய கஷ்டத்தை எல்லாம் போக்கி இருக்கிறேன்.
ஆனால் என்னுடைய கஷ்டத்தையும், சோகத்தையும் நீக்கியது பல காமெடி ஷோக்கள் தான். அதிலும் ராமர் காமெடி எல்லாம் அடிச்சுக்கவே முடியாது.
அவரோட காமெடியை பார்த்து நான் பல நேரம் தனியாவே பெட்டில உருண்டு சிரிச்சி இருக்கேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், “எனக்கு காமெடி பண்ண மட்டும் இல்ல யாராவது காமெடி பண்ணுனாலும் அதை ரசிக்க ரொம்ப பிடிக்கும்.
அந்த மாதிரி தான் நான் இந்த நாலு மாசமும் காமெடி நிகழ்ச்சிகளை பார்த்து தான் சிரிச்சி பழைய நிலைக்கு சீக்கிரமா வந்தேன்.
என்னுடைய உடல் நிலையை குறித்து ஒரு சில யூ டியூப் சேனல்கள்ல தப்பு தப்பா மெசேஜ் போட்டாங்க.
ஆனால் அதை நான் நல்ல நிலைமையில் வீட்டில் இருந்து பார்த்துட்டு சிரிச்சிட்டு தான் இருந்தேன். ஆனா இப்ப நான் உடம்பு சரி ஆகி மீண்டு வந்ததும். வெளிய போற இடத்துல எல்லாம் பல பேர் என்கிட்ட நீங்க பழையபடி வரணும்னு நாங்க வேண்டிகிட்டோம்னு சொல்றாங்க. இந்த அன்பு பாக்கும்போது எனக்கு சந்தோசமா இருக்கு” என்று அந்த பேட்டியில் ரோபோ சங்கர் பேசியிருக்கிறார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா: மிக்ஸ்டு ரூட் வெஜ் அல்வா
பாலிவுட்டில் உருவாகும் இராமாயணம்: கங்கனா எதிர்ப்பு!
Super hero in