A certificate for salaar

சலார் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!

சினிமா

ரெபெல் ஸ்டார் நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் சலார். இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், மலையாள நடிகர் பிரித்விராஜ், ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் க்ளிம்ஸ் வீடியோ, போஸ்டர்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சலார் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சலார் படத்திற்கு ’ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. மேலும் சலார் படம் 2 மணி நேர 55 நிமிட நீளம் கொண்ட படமாக தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.

சலார் படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன் டிசம்பர் 21 ஆம் தேதி ஷாருக்கான் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள “டன்கி” (Dunki) படம் ரிலீஸ் ஆகிறது என்பதும் குறிப்பிட்டதக்கது.

கேஜிஎஃப் படத்தின் வெற்றியை போலவே சலார் படமும் பிரம்மாண்ட வெற்றியடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

“எப்போது முடிவெடுப்பீர்கள்” : ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

மத்திய பிரதேசத்தின் முதல்வரான அமைச்சர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0