96 பட இயக்குநர் பிரேம்குமார் ஒரு சாடிஸ்ட் என்று நடிகை தேவதர்ஷினி பேசியது மெய்யழகன் பட விழா அரங்கத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்த மெய்யழகன் படம் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று கோவையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை தேவதர்ஷினி 96 பட இயக்குநர் பிரேம்குமார் பற்றி சில விஷயங்களை குறிப்பிட்டார்.
அப்போது, அவர் மிஸ்டர். சி. பிரேம்குமார் என்பவர் மிகப் பெரிய சாடிஸ்ட் என்றார். இந்த சமயத்தில் அரங்கத்தில் பெரும் கரகோஷம் எழுந்தது.
மேலும் நடிகை தேவதர்ஷினி பேசுகையில், ‘பிரேம்குமார் என்னை கூப்பிடுவார். மேடம் ஒரு கதை வச்சுருக்கேன் , படிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க என்று சொல்வார். 10 பக்கம் படிக்கும் போகும் போதே, நெஞ்சலாம் இறுகிடும். 30 பக்கம் போச்சுனா வார்த்தை வராது குரல் வராது. வாசிச்சு முடிக்கும் போது நம்ம மனநிலையை ஊகிக்க முடியாது. சந்தோஷமா, துக்கமா என்று தெரியாது. கதையை படிச்சுட்டேன்னு 2 நாள் கழிச்சு சொல்றேனு சொன்னா விட மாட்டார்.
உடனே அவர் கிட்ட இருந்து 10க்கு மேல் போன் வரும். அப்புறம் 10 15 மெசேஜ் வரும். உடனே பேசு பேசுனு சொல்வார். நாம அவருக்கு போன் செய்தால், நம்மளால பேசவே முடியாது. வாயில் இருந்து வார்த்தைகள் வராது. அந்த சூழல்லையும் கதையை பத்தி சொல்லு சொல்லுனு தொந்தரவு பண்ணுவார். அதாவது, பெண்களை அழ வைக்கிறதுதான் அவருக்கு பிடிக்கும்.
முதல்ல அவரது மனைவியை கதையை படிக்க வச்சு அழ வைப்பார். அப்புறம், எங்களை மாதிரி பலி ஆடுகளை அழ வைப்பார். அப்போ , அவர் சாடிஸ்டா இல்லையா? அந்தளவுக்கு நெகிழ்ச்சியான படங்களை எடுக்கிறார் பிரேம்குமார்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
இலங்கை பிரதமராக ஹரினி அமரசூரியா பதவியேற்பு!
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : எங்கெங்கு மழை?