80ஸ் ரீயூனியன்: கலந்துகொண்ட பிரபலங்கள்!

சினிமா

இந்திய சினிமாவில் 1980களில் முன்னணி நட்சத்திர நடிகர் நடிகைகளாக இருந்தவர்கள்  ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் சந்தித்து தங்கள் நட்பை புதுப்பித்து கொண்டாடி வந்தனர்.

இதற்கு ’80ஸ் ரீயூனியன்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்வின் 10-வது ஆண்டு கொண்டாட்டத்தை 2019-ல் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் ஹைதராபாத் இல்லத்தில் கொண்டாடினார்கள் அதற்கான ஏற்பாட்டை அப்போது சிரஞ்சீவி செய்திருந்தார்.

அடுத்த வருட நிகழ்ச்சிக்கு அனைவரும் காத்திருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் ’80ஸ் ரீயூனியன்’ சந்திப்பு நடைபெறவில்லை. 

இந்நிலையில், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மும்பையில் அனைவரும் சந்தித்தனர். இந்தி நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர்  தென் மாநிலங்களைச் சேர்ந்த நட்சத்திரங்களுக்கு நேற்று(12.11.2022) விருந்தளித்து உபசரித்தனர்.

80s Reunion Celebrities Who Attended

பாலிவுட்டை சேர்ந்த தங்கள் நண்பர்கள் சிலரையும் நேற்று  மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். 

ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட வண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பெண்களுக்கு வெள்ளி மற்றும் ஆரஞ்சு நிறங்களும் ஆண்களுக்கு சாம்பல் மற்றும் ஆரஞ்சு நிறங்களும் அறிவிக்கப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் மேற்கண்ட வண்ணங்களில் அரங்கை தயார் செய்து 80 ஸ் நட்சத்திரங்களை விருந்தினர்களை வரவேற்றனர்.

80s Reunion Celebrities Who Attended

தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஷ்டிர மற்றும் உள்ளூர் உணவுகள் இவ்விருந்தில் முக்கிய இடம் இருந்தது அதிகாலை வரை நடைபெற்ற இந்த நிகழ்வில்

தென்னிந்திய நடிகர்கள் இணைந்து கலைப்படைப்பு ஒன்றிலும் பங்கேற்றனர். விளையாட்டு மற்றும் வினாடி வினா உள்ளிட்டவைக்கு பூனம் தில்லான் ஏற்பாடு செய்திருந்தார்.

நட்பு, தோழமை, வேடிக்கை நிறைந்த மாலைப் பொழுதாக 80ஸ் ரீயூனியன் சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது. 

ராஜ்குமார், சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுச்சந்தர், சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி,

பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, நதியா, பத்மினி, வித்யா பாலன், மீனாட்சி சேஷாத்திரி, மது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இராமானுஜம்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சோயா உணவுகள் எல்லோருக்கும் ஏற்றதா?

சென்னையில் விடிய விடிய மழை: அதிகபட்சமாக 7.4 செ.மீ பதிவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *