நாட்டின் 70வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று (ஆகஸ்ட் 16) அறிவித்துள்ளது.
இந்த விருது பட்டியலில் 2022 ஆம் ஆண்டு சான்றிதழ் பெற்ற 32 மொழிகளைச் சேர்ந்த 309 திரைப்படங்கள் தேசிய விருதுக்கான போட்டியில் இடம்பெற்றன.
சிறந்த படங்கள் விருது!
அதன்படி சிறந்த திரைப்படம் விருதை மலையாள மொழியில் வெளியான ‘ஆட்டம்’ திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் விருதை கன்னட மொழியில் வெளியான ‘காந்தாரா’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த VFX திரைப்படத்திற்கான விருதை இந்தியில் வெளியான ’பிரம்மாஸ்திரா 1’ திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த நடிகர்கள் விருது!
காந்தாரா படத்தினை இயக்கி நடித்த ’ரிஷப் ஷெட்டி’ சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த நடிகை விருதுக்கு திருச்சிற்றம்பலம் (தமிழ்) படத்தில் நடித்த ’நித்யா மேனன்’ மற்றும் கட்ச் எக்ஸ்பிரஸ் (குஜராத்தி) படத்தில் நடித்த ’மான்சி பரேக்’ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த துணை நடிகை விருதை ஊஞ்சாய் (இந்தி) திரைப்படத்தில் நடித்த ’நீனா குப்தா’ பெற்றுள்ளார்.
சிறந்த துணை நடிகர் விருதை ஃபௌஜா(ஹர்யான்வி) படத்தில் நடித்த ’பவன் ராஜ் மல்ஹோத்ரா’ பெற்றுள்ளார்.
சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதுக்கு மாலிகாபுரம் (மலையாளம்) படத்தில் நடித்த ’ஸ்ரீபத்’ தேர்வாகியுள்ளார்.
சிறந்த இயக்குநர்கள் விருது!
சிறந்த இயக்குநர் விருது உஞ்சாய் படத்திற்காக சூரஜ் ஆர் பர்ஜாத்யாவுக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த அறிமுக இயக்குநர் விருது ஃபெளஜா படத்திற்கான பிரமோத் குமார் பெற்றுள்ளார்.
சிறந்த நடன இயக்குனருக்கான விருதை திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடலுக்காக ஜானி மற்றும் சதீஷ் கிருஷ்ணன் பெற்றுள்ளனர்.
சிறந்த சண்டை இயக்குநர் விருதை KGF: அத்தியாயம் 2 (கன்னடம்) திரைப்படத்திற்காக அன்பறிவு சகோதரர்கள் வென்றுள்ளனர்.
சிறந்த திரைக்கதைக்கான விருதை ஆட்டம் படத்திற்காக ஆனந்த் ஏகார்ஷி பெறுகிறார்.
சிறந்த வசனகர்த்தா விருதை குல்மோகர் படத்திற்காக அர்பிதா முகர்ஜி மற்றும் ராகுல் சிட்டெல்லா பெறுகின்றனர்.
சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் (Technicians) விருது!
சிறந்த ஒளிப்பதிவு விருதை பொன்னியின் செல்வன் 1 படத்திற்காக ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் பெறுகிறார்.
சிறந்த படத்தொகுப்பு விருதை ஆட்டம் படத்திற்காக மகேஷ் புவானந்த் பெறுகிறார்.
சிறந்த ஒப்பனை விருது அபரஜிடோ(பெங்காலி) படத்திற்காக சோம்நாத் குண்டுக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது கட்ச் எக்ஸ்பிரஸ் திரைப்படத்திற்காக நிக்கி ஜோஷி பெற்றுள்ளார்.
சிறந்த தயாரிப்பு விருதை அபரஜிடோ படத்திற்காக ஆனந்த ஆத்யா பெறுகிறார்.
சிறந்த இசை விருது!
சிறந்த இசையமைப்பாளர் விருதை பிரம்மாஸ்திரா: 1 படத்திற்காக ப்ரீதம் பெற்றுள்ளார்.
சிறந்த பின்னணி இசைக்கான விருதை பொன்னியின் செல்வன் 1 படத்திற்காக ஏஆர் ரஹ்மான் வென்றுள்ளார். இது அவரது 7வது தேசிய விருதாகும்.
சிறந்த ஒலி வடிவமைப்பு விருதை பொன்னியின் செல்வன் 1 படத்திற்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி பெற்றுள்ளார்.
சிறந்த ஆண் பின்னணி பாடகர் விருதுக்கு பிரம்மாஸ்திரா : 1 படத்தில் இடம்பெற்ற கெசரியா பாடலுக்காக அரிஜித் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த பெண் பின்னணி பாடகி விருதுக்கு மலையாள திரைப்படமான சவுதி வெல்லக்கா CC.225/2009 படத்தில் இடம்பெற்ற சாயும் வெயில் பாடலுக்காக பாம்பே ஜெயஸ்ரீ பெற்றுள்ளார்.
சிறந்த பாடல் வரிகள் விருதை ஃபௌஜா படத்தில் இடம்பெற்ற சலாமி பாடலுக்காக நெளஷாத் சதார் கான் பெற்றுள்ளார்.
சிறப்பு விருதுகள்!
சிறந்த நடிகருக்கான ஜூரி விருதுக்கு குல்மோஹர் படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய் தேர்வாகியுள்ளார்.
தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படமாக கட்ச் எக்ஸ்பிரஸ் (குஜராத்தி) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாநில மொழிகளுக்கான சிறந்த படங்கள் பட்டியல்!
சிறந்த தமிழ் படம் – பொன்னியின் செல்வன் 1
சிறந்த தெலுங்கு படம் – கார்த்திகேயா
சிறந்த ஒடியா படம் – தமன்
சிறந்த பஞ்சாபி திரைப்படம் – பாகி டி டீ
சிறந்த மராத்தி திரைப்படம் – வால்வி
சிறந்த கன்னடத் திரைப்படம் – KGF: அத்தியாயம் 2
சிறந்த இந்தி படம் – குல்மோஹர்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தை கைவிட்ட அண்ணாமலை
பொன்னியின் செல்வன்-1, ஏ.ஆர்.ரஹ்மான், நித்யா மேனனுக்கு தேசிய விருதுகள்!