விஜய்யுடன் இணையும் பிரியா ஆனந்த்

சினிமா

விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் நடிகை பிரியா ஆனந்த் மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

வாரிசு படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணி இணைந்துள்ளது.

7 Screens Thalapathy 67 new update

7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கியது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று (ஜனவரி 30) வெளியிட்டது.

அதன்படி இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் விஜய் உடன் 4வது முறையாக இணைந்துள்ளார் அனிருத் ரவிச்சந்திரன்.

இதுதவிர ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்புப் பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்தனர். அதோடு ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர். நடன இயக்குநராக தினேஷ் இணைந்துள்ளார் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

மேலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காகப் படக்குழு இன்று (ஜனவரி 31) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்நிலையில் அடுத்த அப்டேட்டை கொடுத்துள்ளது 7 ஸ்கிரீன் நிறுவனம். அதன்படி தளபதி 67 படத்தில் நடிகை பிரியா ஆனந்த் மற்றும் பாலிவு நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

”ஜெயலலிதா கட்சியவே இங்கு சிலர் ஏலம் விடுறாங்க!” – முதல்வர் ஸ்டாலின்

ஆந்திராவின் புதிய தலைநகர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *