நடிகர் சூர்யா, ‘சூரரைப்போற்று’ படத்துக்காக சிறந்த நடிகர் விருதை இன்று (செப்டம்பர் 30) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து பெற்றார்.
68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று (செப்டம்பர் 30) டெல்லியில் நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில், நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான படம் ’சூரரைப் போற்று’.
இப்படம், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி, அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துக்காக 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.
சிறந்த படம், சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த பின்னணி இசை (ஜிவி பிரகாஷ்), சிறந்த திரைக்கதை (இயக்குனர் சுதா கொங்கரா) ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த விருதுகள் இன்று டெல்லியில் வழங்கப்பட்டு வருகிறது. இதில், நடிகர் சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
நடிகர் சூர்யா விருதைப் பெறுவதைக் காண்பதற்காக அவரது குடும்பத்தினரும் டெல்லி சென்றிருந்தனர். அவர்கள் குடும்பத்துடன் டெல்லி சென்ற வீடியோ காலை முதல் வைரலாகி வருகிறது.
ஜெ.பிரகாஷ்
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்: சி.வி. சண்முகம் விளக்கம்!
காங்கிரஸ் தலைவர் தேர்தல் : கார்கேவுக்காக விலகிய திக் விஜய் சிங்