இளையராஜா இசையில் ரஜினியின் “பேட்ட”!

Published On:

| By Monisha

5 years of petta

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையில் வெளியான பேட்ட படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த படம் பல ரஜினி ரசிகர்களின் ஃபேவரைட் படமாகவும் மாறியது. பேட்ட படத்தில் ரஜினியின் காமெடி டைமிங், ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என எல்லா காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நன்றாக வொர்க் அவுட்டானது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 10) பேட்ட படம் வெளியாகி 5 ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு பேட்ட படத்தில் இருந்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ரஜினி – சிம்ரன் காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன, ஆனால் அனிருத் இசைக்கு பதிலாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான “என் இனிய பொன் நிலாவே” பாடலுடன் அந்த காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தற்போது ரசிகர்கள் இளையராஜா மியூசிக் வெர்ஷனில் பேட்ட படத்தின் காட்சியை ரசிக்க தொடங்கி விட்டனர்.

பேட்ட படத்திற்கு பிறகு மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் – ரஜினி கூட்டணி எப்போது இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர். தலைவர் 174 அல்லது தலைவர் 175 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

டெட் தேர்வு எப்போது?: வருடாந்திர அட்டவணை வெளியீடு!

எகிறும் கவின் சம்பளம்? : அதிர்ச்சியில் கோலிவுட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel