சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து இந்த வருடத்துடன் 46 ஆண்டுகள் நிறைவடைந்து வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 47 வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளார்.
1975 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி, அபூர்வ ராகங்கள் மூலம் தமிழில் அறிமுகமான ரஜினி 46 ஆண்டுகளைக் கடந்து 47 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
இப்போது ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இதை சிறப்பிக்கும் விதமாக தனது சமூக வலைதளபக்கத்தில் ரஜினிகாந்துக்கு சிறப்பு சிடிபி ஒன்றை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் , ”47 ஆண்டுகால ஈடு இணையற்ற சூப்பர்ஸ்டார் 47YearsOfRajinism CDP ஐ தொடங்குவதில் மகிழ்ச்சி & ஒரே ஒரு தலைவருக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
இந்த சிடிபி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சுமார் 46 வருடங்களாக இடைவிடாமல் நடித்து ரசிகர்கள் மனதை வசீகரித்து கருப்பு வெள்ளை, படங்கள் எடுக்கப்பட்ட காலம் முதல் 3டி மோஷன் பிச்சர்ஸ் படங்கள் வரை, பல்வேறு தொழில்நுட்பங்கள் கொண்ட படங்களில் நடித்துள்ள நடிகர் என்கிற சிறப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மாற்று உறுப்பு கிடைத்திருந்தால்… கணவர் நினைவில் மீனா எடுத்துள்ள உறுதிமொழி!