பார்வையாளர்களின் கூட்டம் குறைந்ததால் தெலங்கானாவில் உள்ள சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகள் மே 17-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு மூடப்படும் என தெலங்கானா திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் அதிகமான வசூலையும், பாக்ஸ் ஆபீஸ் வசூலில்தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்கு அதிக சதவீதத்தில் பங்கு தொகையும் தனித் திரையரங்குகள் மூலமே கிடைத்து வருகிறது.
அதனால் தனித் திரையரங்குகளில் படங்களை திரையிடுவதற்கு தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் முன்னுரிமை கொடுப்பது வழக்கம்.
இந்தியாவில் மல்டிபிளக்ஸ், மால்கள் அதிகரித்து வந்தாலும் தனித் திரையரங்குகளின் தனித்தன்மையும், ஆதிக்கமும் இன்றளவும் இருந்து வருகின்றன.
தெலுங்கு சினிமாவில் சங்கராந்தி பண்டிகைக்குப் பிறகு வணிக மதிப்பும், வசூல் செய்ய கூடிய நடிகர்களின் படங்கள் வெளியிடப்படவில்லை
தெலுங்கில் நட்சத்திரநடிகரான விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான ‘ஃபேமிலி ஸ்டார்’ படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
மக்களவை தேர்தல், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி என மக்களின் கவனம் இருந்து வருவதால் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருகை குறைந்து போனது.
ஓடிடியில் எல்லாப்படங்களையும் பார்க்கும் வசதி இருப்பதாலும், 28 நாட்களில் புதிய படங்கள் ஓடிடியில் வந்து விடும் என்பதால் பட்ஜெட் படங்களை திரையரங்கிற்கு வந்து பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால் புதிய திரைப்படங்களின் வெளியீட்டை மட்டுமே நம்பி இருக்கும் தனித் திரையரங்குகள் பாதிக்கப்படுகின்றன.
மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் வணிக ரீதியாக ஸ்டால், பார்க்கிங் மூலம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மூலம் கிடைக்கும் வருமானத்தை காட்டிலும் அதிக வருவாயை ஈட்டுகின்றன.
ஒரு வேளை குறைந்தபட்ச டிக்கெட் விற்பனை ஆகவில்லை என்றால் அந்த காட்சியை ரத்து செய்து விடுகின்றன. இது போன்ற எந்தவொரு வாய்ப்பும் தனித்திரையரங்குகளுக்கு இல்லை என்பதால் மே 17 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 10 நாட்கள் ஒற்றை திரை கொண்ட திரையரங்குகளை மூட தெலங்கானா திரையரங்குகள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யுவன் தயாரிக்கும் புதிய படம்… மீண்டும் இணையும் ‘ஜோ’ ஜோடி?
நடிகை சாயா சிங் வீட்டில் திருட்டு… பணிப்பெண் கைவரிசை!
பியூட்டி டிப்ஸ்: கருமையைப் போக்கும் கிரீன் டீ!
டாப் 10 செய்திகள் : செந்தில் பாலாஜி வழக்கு முதல் மழை அப்டேட் வரை!