actors association mansoor alikhan

நடிகர் சங்கத்திற்கு 4 மணி நேரம் அவகாசம்: மன்சூர் அலிகான் எச்சரிக்கை!

சினிமா

நடிகை த்ரிஷா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார். actors association mansoor alikhan

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது,

இந்நிலையில் நடிகை த்ரிஷா உடன் இணைந்து நடிக்க லியோ படத்தில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர் சந்திப்பில் பேசியது சர்ச்சையானது. இதற்கு திரைத்துறையினர் முதல் ரசிகர்கள் வரை கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை த்ரிஷாவும் கண்டனம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து ”மன்சூர் அலிகான், தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என தென்னிந்திய நடிகர் சங்கம் கருதுகிறது” என நடிகர் சங்கம் நேற்றைய தினம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 21) சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், “வேலைவாய்ப்புகளை இழந்து தமிழ்நாடு மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. கடந்த செய்தியாளர் சந்திப்பில் நான் சொன்னதன் நோக்கம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். வெறும் 300 கோடி பணமும் 3000 பேர் இருந்தால் போதும் உடனடியாக எடுத்திடலாம்.

அதன்பிறகு நாம் இட ஒதுக்கீடு கேட்டு யாரிடமும் தொங்க தேவையில்லை. அதற்காக நான் போராடினேன். அதையெல்லாம் மறைத்துவிட்டு கட் பண்ணி ஒரு வீடியோ போடுகிறார்கள். ஹிரோயின்ஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லையே என்று வைரமுத்து ஆதங்கப்படுகிறார். எனவே அவர்களை மையப்படுத்தும் விதமாக, எனக்கே வேலை கிடைக்கிறது இல்லை என்ற விதத்தில் பேசினேன்.

நடிகர் சங்கம் செய்தது மிகப்பெரிய தவறு. இப்படி ஒரு வீடியோ வந்திருக்கிறது என்று ஒரு கேள்வி கேட்கவில்லை. தொலைப்பேசி வாயிலாகவும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. ஒரு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கொடுங்கள் என்று கேட்க வேண்டும். ஒரு சங்கம் நடத்துகிறவர்கள் இப்படி செய்யலாமா?

நடிகர் சங்கத்திற்கு 4 மணி நேரம் அவகாசம் தருகிறேன். என்னை தொடர்பு கொண்டு பதிலளிக்க வேண்டும். நேற்று வெளியிட்ட அறிக்கையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். மன்னிப்பு கேட்குற ஜாதியா நான். நடிகர் சங்கம் மிகப்பெரிய இமாலய தவறு செய்துள்ளது. நான் அமைதிக் காத்துக் கொண்டிருக்கிறேன். எரிமலையாக குமுறினேன் என்றால் எல்லோரையும் துண்ட காணோம், துணிய காணோம் என்று ஓட விட்டுவிடுவேன்.

என்னை பலியாடு ஆக்கிவிட்டு, கருப்பு ஆடாக ஆக்கிவிட்டு நீங்கள் நல்ல பெயர் எடுக்கிறீர்களா? இது என்ன நியாயம். தற்போது நான் நிறைய செலவு செய்து படத்தை வெளியிட உள்ளேன். இந்த நேரத்தில் படமும் வெளியாகாத அளவிற்கு, நாங்கள் நடிகர் சங்கம் தீர்ப்பிற்கு கட்டுப்படுகிறோம் என்று திரையரங்குகளிடம் இருந்து செய்தி வந்து கொண்டே இருக்கிறது.

த்ரிஷா, மன்சூர் அலிகானுடன் வாழ்க்கையில் நடிக்க மாட்டேன் என்று சொன்ன உடன் அனைத்து மொழிகளிலும், ஏன் ஹாலிவுட் வரைக்கும் போய்விட்டது. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி.

சினிமாவில் ரேப் சீன் என்றால் என்ன?. ஒரு கொலை செய்வது போன்ற காட்சி வருகிறது என்றால் நிஜமாகவே கொலை செய்து விட்டார்கள் என்று அர்த்தமா? இது குறித்து நடிகர் சங்கம் யோசித்திருக்க வேண்டும்.

தமிழ்நாடே என் பக்கம் இருக்கிறது. இதற்கெல்லாம் நான் பயப்படுபவன் அல்ல. த்ரிஷா குறித்து நான் எதுவும் தவறாக பேசவில்லை” என்று தெரிவித்துள்ளார். actors association mansoor alikhan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா 

தெலங்கானா தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு!

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்களின் வீடியோ வெளியீடு!

+1
0
+1
4
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0