நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் நடிகை பிரியங்கா மோகன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், நடிகர் சந்திப் கிஷன், நடிகை நிவேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேப்டன் மில்லர் 2 பாகங்களாக வெளியாகும் என்றும் சில தகவல்கள் கூறப்பட்டது.
இந்நிலையில், கேப்டன் மில்லர் படம் குறித்து பேசிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன், ”படத்தில் தனுஷின் கதாபாத்திரம் ஒரு அப்பாவியான இளைஞர் எப்படி ஒரு ரெபல் ஆக மாறுகிறார் என்ற ஜர்னி தான் கதையின் கரு. இந்த படத்தில் தனுஷ் மூன்று கெட்டப்பில் நடித்திருக்கிறார்.
கேப்டன் மில்லர் படத்திற்கு prequel, sequel என 3 பாகங்கள் உள்ளது. அடுத்த இரண்டு பாகங்களும் பெரும் பொருட்செலவில் தயாராகும். கேப்டன் மில்லர் படம் வெற்றியடைந்தால் நிச்சயம் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும்” என்று இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறியுள்ளார்.
மேலும் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
நிக்சன் மன்னிப்பே கேட்கல : உண்மைய முழுசா தெரிஞ்சுகிட்டேன் – வினுஷா
தின்னுடாம வச்சிக்கங்க… திருச்சியில் அண்ணாமலை காட்டிய வடை பின்னணி!
தீபாவளி நேரத்தில் குறைந்த தங்கம் விலை!