ராயன் படத்தின் 3 நாள் வசூல் இத்தனை கோடியா? : நன்றி தெரிவித்த தனுஷ்

Published On:

| By christopher

3 days collection of Raayan movie is so much crores? : Thanks Dhanush

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ராயன். இதில் அவருடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் படத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக அடங்காத அசுரன் பாடலுக்கு மொத்த தியேட்டரும் வைப் செய்கிறது.

மேலும் தனுஷின் 50வது திரைப்படம் என்ற மிகப்பெரும் எதிர்பார்ப்பில் கடந்த 26ஆம் தேதி திரைக்கு வந்த ராயன், கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் முதல்நாளில் ரூ.12 கோடி வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் படத்தின் முதல் 3 நாள் வசூல் விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ராயன் திரைப்படம் கடந்த 3 நாட்களில் உலகளவில் 75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில்  ரூ. 100 கோடி வசூலைத் தொட்டுவிடும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ஆடி கிருத்திகையை ஒட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று காலை தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார் நடிகர் தனுஷ். அதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

Image

தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில்  ”பார்வையாளர்கள், திரையுலக சகோதரத்துவம், நண்பர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் மற்றும் எனது ஆதரவின் தூண்களான எனது ரசிகர்கள் – உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும் எனக்குப் பொழிந்ததற்காக எனது மனமார்ந்த நன்றி. இதுவே சிறந்த BLOCKBUSTER பிறந்தநாள் பரிசு.” என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”கப்பலூர் சுங்கச்சாவடியில் இனி கட்டணம் செலுத்த வேண்டாம்” : அமைச்சர் மூர்த்தி

தமிழ்நாடு கொலை மாநிலமா? எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel