ஆஸ்கர் வென்ற ‘ஆர்.ஆர்.ஆர்’ முதல் ‘அவதார்’ வரை…எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்?

சினிமா

2023ஆம் ஆண்டிற்கான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் மார்ச் 13 நடைபெற்றது.

இதில் இயக்குனர் ராஜமௌவுலி இயக்கத்தில் கீரவாணி இசையில், சந்திரபோஸ் வரிகளில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றது.

மேலும், சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் தமிழ்நாட்டின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது.

இந்நிலையில், இந்த விழாவில் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்த படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் ஒளிபரப்பாகி வருகின்றன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்:

ஆர்.ஆர்.ஆர் (RRR)

இப்படத்தை ஜீ5 மற்றும் ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.

தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் (The Elephant Whisperers)

கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கத்தில் வெளியாகி ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்‘ என்கிற தமிழக ஆவண குறும்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once)

95-வது ஆஸ்கர் விழாவில் 7விருதுகளை வென்ற ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ என்கிற அமெரிக்க திரைப்படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் கண்டுகளிக்கலாம்.

ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet On The Western Front)

ஆஸ்கர் விழாவில் ’ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட்’ என்கிற ஜெர்மன் நாட்டு திரைப்படம் 4விருதுகளை வென்றது. இப்படம் தற்போது நெட்பிளிக்ஸில் ஸ்டிரீம் ஆகி வருகிறது.

பிளாக் பாந்தர் வகாண்டா ஃபார்எவர் (Black Panther Wakanda Forever)

ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை வென்ற ’பிளாக் பாந்தர் வகாண்டா ஃபார்எவர்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகிறது.

டாப் கன் மேவ்ரிக் (TopGun Maverick)

டாம் குரூஸ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற ’டாப் கன் மேவ்ரிக்’ திரைப்படம், ஆஸ்கரின் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதை வென்றிருந்தது. இப்படத்தை அமேசான் பிரைமில் கண்டுகளிக்கலாம்.

பினாச்சியோ (Pinocchio)

சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்ற ’பினாச்சியோ’ என்கிற திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

அவதார் தி வே ஆஃப் வாட்டர் (Avatar The Way Of Water)

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றதோடு ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வி எஃப் எக்ஸிற்கான விருதை வென்ற ’அவதார் 2’ படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், ஆப்பிள் டிவி மற்றும் வூட் ஆகிய நான்கு ஓடிடி தளங்களில் வருகிற மார்ச் 28-ந் தேதி முதல் பார்க்கலாம்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கிச்சன் கீர்த்தனா: சாமை – கறிவேப்பிலை வற்றல்

போட்டித் தேர்வு: கட்டணமில்லா பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

2023 oscar winning movies ott
+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *