தமிழ் சினிமாவுக்கு 2023 முக்கியமான ஆண்டாக கருதப்பட்டது காரணம், மாறிவரும் பார்வையாளர்களின் ரசனைக்கேற்ற திரைப்படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றன.
பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய அறிமுக இயக்குநர்கள்!
2023 ஆம்ஆண்டின் முதல் அரையாண்டில் 107 நேரடி தமிழ் படங்கள் வெளியானது. வசூலில் பாய்ச்சல் வேகத்தில் முன்னேற்றம் கண்டது. தமிழ்சினிமாவில் புதிய முயற்சிகள் சாத்தியமானது. குறைந்த செலவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் லாபத்தை பெற்று தந்தது. படைப்பு ரீதியாகவும் பாராட்டுக்களை குவித்தது.
அறிமுக இயக்குநர்கள் கணேஷ் கே.பாபு இயக்கிய டாடா, மந்திர மூர்த்தி இயக்கிய அயோத்தி இரண்டும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றியை பெற்றது.
தரணி ராசேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘யாத்திசை’ குறைந்த பட்ஜெட்டில் பிரமாண்டத்தை காட்ட முடியும் என நிரூபித்தது.
ரூ.300 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன்
வணிக பார்முலாவில் வெளியான வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன் – 2, வாத்தி,பிச்சைக்காரன் – 2, குட்நைட், போர் தொழில் போன்ற படங்கள் வசூலை குவித்தது.
வணிகசினிமா வசூல் ரீதியாக திரையரங்க வசூலில் ஆதிக்கம் செலுத்திய சூழலில் கதைக்களத்தை பிரதானமாக கொண்ட கொண்ட படங்களும் 2023 ஆம் ஆண்டின் முதல் அரை ஆண்டில் வெளியாகி கவனம் பெற்றது.
இயக்குநர் ஷானின் ‘பொம்மை நாயகி’ உருவக்கேலி செய்யப்பட்ட யோகி பாபுவிடமிருந்து அழுத்தமான நடிப்பை கொண்டு வந்தது. வெற்றிமாறனின் விடுதலை பாகம் 1 காமெடி நடிகரான சூரியை கதாநாயகன் ஆக்கி மலைவாழ் மக்களின் வலியை பேசியது.
சமூக நீதியை வலியுறுத்திய மாமன்னன், இராவண கோட்டம், கழுவேத்தி மூர்க்கன், படங்கள் வெளியானது. பெண்களை பிரதான கதாபாத்திரமாக கொண்ட தி கிரேட் இண்டியன் கிச்சன், சொப்பன சுந்தரி, கொன்றால் பாவம், மாருதி நகர் காவல் நிலையம், கருங்காப்பியம், கோஸ்டி, ரெஜினா, உன்னால் என்னால், படங்களும் வெளியானது.
இயக்குநர் ஜெகன் விஜயா ‘பிகினிங்’ படம் மூலம் ஒரே திரையில் இரண்டு படங்களை காட்சிப்படுத்தும் புதிய முயற்சியை அறிமுகம் செய்தார்.
மொத்தத்தில் முதல் அரையாண்டில் அறிமுக இயக்குநர்கள் வெற்றிகரமான படங்களை வழங்க, விஜய், அஜித் குமார், தனுஷ், நடித்த படங்கள் ரூ.100 கோடி வசூலை கடந்தது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் உலக அளவில் ரூ.300 கோடி மொத்த வசூல் செய்தது.
2023 முதல் அரையாண்டில் வெளியான பட்ஜெட் படங்களும், பிரம்மாண்ட பட்ஜெட் படங்களும் இணைந்து திரையரங்குகளில் கூட்டம் குறையாமல், வசூலை சமச்சீராக வைத்திருந்தது.
2024 – ஏமாற்றம்!
ஆனால் 2024 ஆம் ஆண்டு மேற்குறிப்பிட்ட எந்தவொரு ஆச்சர்யத்தையும் நிகழ்த்தாமல் கடந்து போன அரையாண்டில் தமிழ் சினிமா ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியான ஜெயிலர், லியோ, பைட் கிளப் போன்ற படங்கள் வன்முறை களத்தை நியாயப்படுத்தி சென்ற படங்களாகும். அதன் தொடர்ச்சியாக வன்முறை காட்சிகள் நிறைந்த படங்கள் அதிகமாக வெளியானது. கதைக்கு தேவையான வன்முறை காட்சிகள் என்பதை விட்டு வன்முறைக்குள் கதை என களம் மாறியிருக்கிறது.
வன்முறைக்குள் கதைகளம்!
உதாரணமாக மகாராஜா படம் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை பேசிய படம்
பாதிக்கப்பட்ட மாணவியை வெறும் கருவியாக்கி, அதன் வழியே இரு ஆண்களின் பழிவாங்கல் கதையை அதீத வன்முறையுடன் காட்சிப்படுத்தியுள்ளது. பதட்டத்திற்குரிய விஷயத்தை வன்முறை காட்சிகளை வைத்து, பிரச்சினையை திசை திருப்பி மழுங்கடிக்க வேண்டுமா?
எடுத்துக்கொண்ட பிரச்சினையை அழுத்தமாக பேசாமல் அதன் வீரியத்தை மறக்கடிக்கும் வன்முறை எல்லை மீறுவதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டினாலும் விஐய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 50வது படம் என்பதால் ஊடகங்கள் ஒரு தலைபட்சமாகவே படத்தை வானளாவ புகழ்ந்தன. திரையரங்குகளில் கல்லா கட்டியது மகாராஜா.
ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆலய நுழைவு போராட்டம் உள்ளிட்ட விஷயங்களை பேசியது என்றாலும், அதையெல்லாம் கடந்து படத்தில் வெடித்த தோட்டாக்கள் எண்ணிக்கை கணக்கை எண்ணி மாளாத அளவாகும்.
ரத்தம் சொட்டச் சொட்ட, தலையை வெட்டி கையோடு எடுத்துச்செல்லும் ‘ரத்னம்’ படத்தில் இடம்பெற்ற அபத்தம் நிறைந்த காட்சிகளடங்கிய படத்திற்கு குடும்பத்துடன் தியேட்டருக்கு மக்கள் எப்படி வருவார்கள் என்பதை இயக்குநர்களும், நடிகர்களும் யோசிக்க தவறி வருகிறார்கள்.
கவனம் ஈர்த்த ப்ளூ ஸ்டார், J.பேபி
கடந்த ஆண்டை போன்று கொண்டாட கூடிய படங்கள் இல்லை. என்றாலும் சில படங்கள் ஆறுதலையும், வசூலையும் பெற்று தந்ததை குறிப்பிட்டாக வேண்டும்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அயலான்’ அதன் கிராபிக்ஸ் காட்சிகளால் மக்களை குடும்பத்துடன் திரையரங்கிற்கு அழைத்து வந்தது. படைப்பு ரீதியாகஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ கிரிக்கெட்டின் வழியே ஊர் – காலனி ஏற்றத்தாழ்வுகளையும், ஒற்றுமையின் தேவையையும் உணர்த்தியது.
ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடித்த லால் சலாம் படத்துடன் களமிறங்கிய லவ்வர் டாக்ஸிக் காதலின் விளைவுகளைப் பேசியதுடன் திரைக்கதையாலும் கவனிக்கப்பட்டதுடன் தமிழ்நாட்டில் மட்டும் 10 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தது.
ஊர்வசி நடிப்பில் வெளியான ‘J.பேபி’ எமோஷனலான ட்ராவல் நிறைவைத் தந்தது. குரங்கு பெடல் குழந்தைகளுக்கான படமாக ஓடிடி வெளியிட்டுக்குப் பின் பிரபலமாகி கவனம் பெற்று வருகிறது.
ஜனவரியில் வெளியான கேப்டன் மில்லர் தட்டுத் தடுமாறி 100 கோடி வசூலை எட்டிப் பிடித்தது என்றால் அடுத்த 100 கோடி வசூல் படத்தை காண ஐந்து மாதங்கள் கடந்து அரண்மனை – 4 படம் வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
கடந்த ஆறு மாதங்களில் வெளியான 110 படங்களில் குறிப்பிடத்தக்க வசூல் செய்த படங்கள்:
1.கேப்டன் மில்லர் – 105 கோடி
2. அரண்மனை – 4-101 கோடி
3 .. மகாராஜா- 100
4. அயலான்-95 கோடி
5. கருடன்- 58 கோடி
6. லால் சலாம்- 36.5 கோடி
7. மேரி கிறிஸ்துமஸ் – 26.5 கோடி
8. மிஷன் சேப்டர் – 23.5 கோடி
2024 முதல் அரையாண்டில் வெளியான நேரடி தமிழ் படங்கள் பட்டியல்!
ஜனவரி
05.01.2024- அரணம்
05.01.2024- கும்பாரி
05.01.2024- உசிரே நீதானடி
05.01.2024- எங்க வீட்ல பார்ட்டி
12.01.2024-மேரி கிறிஸ்துமஸ்
12.01.2024- அயலான்
12.01.2024- கேப்டன் மில்லர்
12.01.2024- மிஷன் சேப்டர் – 1
25.01.2024- செவப்பி
25.01.2024- சிங்கப்பூர் சலூன்
25.01.2024- தூக்குத்துரை
25.01.2024- முடக்கறுத்தான்
25.01.2024- புளு ஸ்டார்
26.01.2024-நியதி
26.01.2024- தென் தமிழகம்
26.01.2024-லோக்கல் சரக்கு
27.01.2024- த.நா
பிப்ரவரி
02.02.2024- வடக்குப்பட்டி ராமசாமி
02.02.2024- டெவில்
02.02.2024-மறக்குமா நெஞ்சம்
02.02.2024-சிக்லெட்டுகள்
09.02.2024- லால் சலாம்
09.02.2024- லவ்வர்ஸ்
09.02.2024- இமெயில்
09.02.2024- இப்படிக்கு காதல்
16.02.2024- கழுமரம்
16.02.2024- எப்போதும் ராஜா
16.02.2024- சைரன்
16.02.2024- ஆந்தை
16.02.2624 – எட்டும் வரை எட்டும்
23.02.2024- வித்தைக்காரன்
23.02.2024- ரணம் அறம் தவறேல்
23.02.2024-பைரி
23.02.2024- நினைவெல்லாம் நீயடா
23.02.2024- பாம்பாட்டம்
23.02.2024-கிளாஸ்மேட்
23.02.2024- பெர்த்மார்க்,
23.02.2024-ஆபரேஷன் லைலா,
23.02.2024- பூ போன்ற காதல்
மார்ச்
01.03.2024- சத்தமின்றி முத்தம்தா
01.03.2024- ஆதிமூலம்
01.03.2024- போர்
01.03.2024- அய்யய்யோ
01.03.2024-ஜோஸ்வா இமை போல் காக்க
08.03.2024-ஜே பேபி
08.03.2024- நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளா
08.03.2024- உறவுகள் தொடர்கதை
15.03.2024- காடுவெட்டி
15.03.2024- யாவரும் வல்லவர்
15.03.2024- ஆராய்ச்சி
15.03.2024- அமிகோகேரேஜ்
15.03.2024- டெவில்
22.03.2024- ரெபெல்
22.03.2024- சித்து 20220
22.03.2024- முனியாண்டியின் முனிபாய்ச்சல்
29.03.2024- வெப்பம் குளிர் மழை
29.03.20 24- இடிமின்னல் காதல்
29.03.2024- திபாய்ஸ்
29.03.2024- ஹாட்ஸ்பாட்
29.03.2024- எப்புட்ரா
29.03.2024- பூமர் அங்கிள்
ஏப்ரல்
05.04.2024- ஒரு தவறு செய்தால்
05.04.2024- கற்பு பூமியில்
05.04.2024- ஒயிட்ரோஸ்.
05.04.2024- டபுள் டக்கர்
05.04.2024- இரவின் கண்கள்
05.04.20 24- கள்வன்
05.04.2024- ஆலகாலம்
12.04.2024- டியர்
12.04.2024- அறிவியல்
12.04.2024- வா பகண்டையா
12.04.2024- ரோமியோ
19.04.2024- வல்லவன் வகுத்ததடா
29.04.2024- கொலைதூரம்
29.04.2024- இங்கு மிருகங்கள் வாழும் இடம்
29.04.2024- ஒரு நொடி
29.04.2024- ரத்னம்
மே
03.05.2024- அரண்மனை-4
03.05.2024-நின்னு விளையாடு
03.05.2024- அக்கரன்
03.05.2024- குரங்கு பெடல்
03.05.2024- சபரி
10.05.2024- உயிர் தமிழுக்கு
10.05.2024- ரசவாதி
10.05.2024- ஸ்டார்
10.05.2024-மாயவன் வேட்டை
17.05.2024- இங்கு நான்தான் கிங்கு
17.05.2024- எலக்சன்
17.05.2024- கன்னி
17.05.2024- படிக்காத பக்கங்கள்
24.05.2024- பகலரியான்
24.05.2024- PT சார்
24.05.2024-6 கண்களும் ஒரே பார்வை
31.05.2024- குற்றப் பிண்ணனி
31.05.2024- புஜ்ஜி
31.05.2024- கருடன்
31.05.2024- ஹிட்லிஸ்ட்
ஜூன்
07.06.2024- பிதா
07.06.2024- இனி ஒரு காதல் செய்வோம்
07.06.2024- வெப்பன்
07.06.2024- ஹரா
07.06.2024- அஞ்சாமை
07.06.2024- தண்டு பாளையம்
07.06.2024- காழ்
14.06.2024- மகாராஜா
14.06.2024-பித்தல மாத்தி
21.06.2024- லாந்தர்
21.06.2024- பயமறியா பிரமை
21.06.2024- ரயில்
21.06.2024- சட்டம் என் கையில்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
ராகுல் காந்தியின் கூற்றை எதிரொலித்த விஜய் : செல்வப்பெருந்தகை
நீட் தேர்வு எதிர்ப்பு: விஜய்யின் கருத்தை வரவேற்ற ஆர்.எஸ்.பாரதி