மாயமான கப்பலை வைத்து புது படம்… “2018” இயக்குனரின் அடுத்த முயற்சி!

சினிமா

நடிகர் டோவினோ தாமஸின் நடிப்பில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் வெளியாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்த படம் 2018.

2018 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ள பாதிப்பை மையக்கதையாக கொண்டு 30 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட 2018 திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 175 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மலையாள திரைப்பட உலகில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. மேலும் 2018 திரைப்படம் ஆஸ்கார் விருதுகளுக்கு அனுப்ப தேர்வாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2018 படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஜூட் அந்தனி ஜோசப் மீண்டும் ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

1979 ஆம் ஆண்டு கேரள கப்பல் கழகத்திற்கு சொந்தமான எம்வி கைரளி என்கின்ற கப்பல் 20,000 டன் எடை கொண்ட இரும்பை சுமந்து கொண்டு 49 பணியாளர்களுடன் ஜெர்மனி நோக்கி பயணித்தது. அப்போது கடலில் ஏற்பட்ட சூழலில் சிக்கி அந்த கப்பல் மாயமானது.

இந்த கதையை மையமாக கொண்டு எழுத்தாளர் ஜோஷி ஜோசப் உடன் இணைந்து திரைக்கதையை உருவாக்கி இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

2018 படத்தை போலே இந்த கப்பல் சம்பந்தப்பட்ட படம் மிக பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

கனமழையிலும் பணியில்… சென்னை மாநகராட்சிக்கு அண்ணாமலை பாராட்டு!

டிஜிட்டல் திண்ணை: ஜெ.நினைவு நாள்… அதிமுக ப்ளான் – பன்னீருக்கு ஆபத்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *