மலையாள படம் ஒன்றில் நடித்த போது, தன்னுடன் நெருக்கமாக கட்டி பிடிக்கும் காட்சியில் நடிக்க 17 டேக்குகள் வரை நடிகர் ஒருவர் எடுத்ததாக பாதிக்கப்பட்ட நடிகை கண்ணீர் மல்க ஹேமா கமிஷனிடத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு தமிழில் தீபாவளி என்ற படத்தில் நடித்த நடிகை ஒருவர், நடிகர் திலீப் குமாரால் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் நடிகர் திலீப்குமார் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து மலையாள சினிமாவில் நடிகைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாகவும் அவற்றை முன்னணி நடிகர்களே சிலர் அரங்கேற்றுவதாகவும் நடிகைகள் புகார் தெரிவித்திருந்தனர்.
மேலும், மலையாள திரையுலக சூப்பர்ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் போன்றவர்கள் கூட பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க முயலாமலும் கண்டு கொள்ளாமலும் இருந்தாகவும் சொல்லப்பட்டது.
மலையாள திரையுலகில் நடக்கும் இந்த கொடுமைகள் குறித்து விசாரித்து அறிக்கை வழங்க நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு நபர் கமிஷனை கேரள அரசு நியமித்தது. ஹேமா கமிஷன் அறிக்கை தற்போது, வெளியிடப்பட்டுள்ளது.
அதில் முத்தக் காட்சி, கட்டிப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதற்கு நடிகைகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பாலியல் தொல்லைக்குள்ளான ஒரு நடிகையை கட்டி பிடித்து தான் நடிக்க வேண்டும் என ஒரு நடிகர் கட்டாயப்படுத்தினார் என்றும் அந்த நடிகர் அந்த கட்டி பிடிக்கும் சீனை 17 முறை நடித்து ரீடேக் வாங்கி 18ஆவது முறைதான் சரியாக நடித்தததாக சொல்லப்பட்டுள்ளது.
இது வேண்டுமென்றே செய்யப்பட்டது என்பது அந்த நடிகைக்கு நன்றாகவே தெரிந்தது என்றும் டேக் வாங்கியதற்கு நடிகரை திட்டாமல், நடிகையை இயக்குநர் மிகவும் மோசமாக திட்டியதாகவும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
அடுத்த நாள் முதல் அந்த நடிகருடன்தான் கணவன், மனைவியாகவே அந்த நடிகைக்கு நடிக்க வேண்டிய சூழல் இருந்துள்ளது. தினமும் அந்த நடிகரை கட்டி பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க வைத்தனர் என்றும் தினமும் அவருடன் அப்படி நடிப்பது கொடுமையாகவே இருந்ததாக அந்த நடிகை கண்ணீர் மல்க கூறியதாக ஹேமா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
வேலைவாய்ப்பு: திருச்சி என்ஐடியில் பணி!
மலையாள திரையுலகில் பாலியல் துன்புறுத்தல்கள் : ஹேமா கமிஷன் அறிக்கையால் அதிர்ச்சி!