16வது ஆசியத் திரைப்பட விருதுகளுக்குப் பொன்னியின் செல்வன் திரைப்படம் 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எழுத்தாளர் கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் கதையை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாகப் படமாக இயக்கியுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், நாசர், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
லைகா புரோடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் வெளியானது.
பொன்னியின் செல்வன் வெளியாவதை ரசிகர்கள் திருவிழா போலவே கொண்டாடினார்கள். மேலும் சிறந்த வரவேற்போடு 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், ஹாங்காங்கில் நடைபெற இருக்கும் 16வது ஆசியத் திரைப்பட விருதுகளில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் 6 பிரிவுகளில் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த காஸ்ட்யூம் டிசைன், சிறந்த புரொடக்ஷன் டிசைன் ஆகிய பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆசிய விருதுக்குத் தேர்வாகும் படங்களுக்கு வரும் மார்ச் 12 ஆம் தேதி ஹாங்காங்கில் உள்ள ஹாங்காங் பேலஸ் மியூசியத்தில் விருது வழங்கப்பட உள்ளது.
அதேபோல, ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படமும் இரண்டு பிரிவுகளில் ஆசிய விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
ஹெச்.ராஜாவுக்காக பத்தாயிரம் பக்தர்களையும் நடராஜரையும் காக்க வைத்த தீட்சிதர்கள்
விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்தவர் கைது: பணி நீக்கம் செய்த அமெரிக்க நிறுவனம்!