அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபரும், பைக் ரேஸருமான டிடிஎஃப் வாசன் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று கொண்டே வீலிங் செய்ததில் விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்த நிலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவதன் மூலம் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், கவனக்குறைவாக செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளில் டிடிஎஃப் வாசன் மீது காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து இன்று (செப்டம்பர் 19) கொலை முயற்சி உள்ளிட்ட மேலும் 3 பிரிவுகளில் ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி வழக்குப் பதிவு செய்த காஞ்சிபுரம் போலீசார், டிடிஎஃப் வாசனை கைது செய்தனர்.
தொடர்ந்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிஎஃப் வாசனுக்கு அக்டோபர் 3 ஆம் தேதி வரை (15 நாட்கள்) நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே ”நடந்தது எதிர்பாராத விபத்து. ஸ்டெண்ட் செய்யவில்லை. பைக்கில் இருந்து ஸ்லீப் ஆகி கீழே விழுந்து விட்டேன்” என்று டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.
மோனிஷா
உடைந்த கூட்டணி: போஸ்டர் ஒட்டி மோதும் அதிமுக – பாஜகவினர்!
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு: முதல்வர் உத்தரவு!