பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இயக்கும் வெப் சீரிஸ் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரீஸை ரெட் சில்லீஸ் எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனத்தின் சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார். திரைத்துறையின் பின்னணியில் நடக்கும் கதைக்களமாக உருவாகவுள்ள இந்த வெப் சீரிஸ் 2025ஆம் ஆண்டு வெளியாகத் தயாராகி வருகிறது.
இதுகுறித்த நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இத்தகைய புதுமையான , கவர்ச்சியான சினிமா உலகத்தை பற்றியான பார்வை கொண்ட ஒரு வெப் சீரிஸை நெட்ஃப்லிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
தனித்துவமான கதைசொல்லல் முறையில் இந்த வெப் சீரிஸுக்கு உயிர் தந்துள்ளனர் ஆர்யன் மற்றும் ரெட் சில்லீஸ் எண்டர்டெய்ண்மெண்ட்’ எனத் தெரிவித்துள்ளார். இந்த வெப் சீரிஸில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள், தொழிநுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஏ.ஆர்.ரஹ்மான் – சாயிரா பானு விவாகரத்து: அவரைப்பற்றி இவரும் இவரைப்பற்றி அவரும்… கண் பட்ட கதை!