விஜய்குமாரின் ‘எலக்சன்’ ரிலீஸ் எப்போது?

Published On:

| By Minnambalam Login1

election movie in tamil

நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எலக்சன்’ திரைப்படத்தில் விஜய்குமார், ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை திரைக்கதையாக்கி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.

மேலும், இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எலக்சன்’ தொடர்பான பாடலும், பாடலுக்கான காணொளியும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு வெளியிடப்பட்டது.வெளியான குறுகிய காலத்திற்குள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக மே 17 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.‌

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நான் இன்னொரு புதினா? – சரத்பவாருக்கு மோடி பதில்!

புத்தகங்களை பரிசளிக்க ஆசிரியர்கள் கை ஓங்குவது எப்போது?

’கூல் கேங்ஸ்டர்’ ஆக நடிக்க ஆசைப்படும் விஜய் பட நடிகை!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share