தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று (ஜூலை 27) வெளியிட்டுள்ளது.
கோலிவுட், பாலிவுட் , ஹாலிவுட் என தனுஷ் தற்போது திரைத் துறையில் அசத்திக் கொண்டிருக்கிறார். டோலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார். கடந்த ஜுலை 22 ஆம் தேதி ’தி கிரே மேன்’ ஹாலிவுட் படம் ஒடிடி தளமான நெட்பிலிக்ஸில் வெளியானது. தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
அதனை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என பெயரிடப்பட்ட படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் தனுஷ் ஆசிரியர் மற்றும் மாணவன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது. தெலுங்கில் இப்படத்திற்கு ”சார்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் தனுஷ் பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனால் சமூக வலைதளங்களில் வாத்தி என்ற ஹேஷ்டேக் தற்போது டிரண்டாகி வருகிறது.
நாளை வாத்தி படத்தின் டீசரை படக்குழு வெளியிட உள்ளது. இந்த படம் வெளியாகும் தேதி குறித்து தற்போது வரை படக்குழு அறிவிக்கவில்லை .
மோனிஷா