தனுஷ் இயக்கத்தில் வெளியான “பா. பாண்டி” படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தனுஷ் தனது 50 வது படமான “ராயன்” படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த “ராயன்” படத்தில் எஸ். ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
ராயன் படத்திற்காக தனுஷ் மொட்டை கெட்டப்பில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
சமீபத்தில் ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “அடங்காத அசுரன்” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகிய இரு கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக வெளியாகி இருக்கும் இந்த செகண்ட் சிங்கிள் பாடலுக்கு “வாட்டர் பாக்கெட்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மேனன் இணைந்து பாடியுள்ள இந்த பாடலுக்கு கானா காதர் வரிகள் எழுதி இருக்கிறார்.
கேங்ஸ்டர் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள தனுஷின் “ராயன்” படம் வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…