யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் சினிமா வட்டாரங்களில் அறிமுகமானவர் கார்த்திக் குமார். இவர் சமீபத்தில் சினிமா படங்களின் டிரெய்லரை விமர்சனம் செய்து வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
அதில், “இப்போது வரும் படங்களின் டிரெய்லர்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கின்றன. அவன் வரப்போறான். அதோ வரான். அவன் வந்துட்டான் என்ற ரகத்தில் உள்ளது. மேலும் அந்த நடிகர்களின் பழைய படங்களின் வசனங்களும் வைக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டு பேசி உள்ளார்.
இந்த வீடியோவை இயக்குநர் வெங்கட்பிரபு தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சிரிக்கும் எமோஜிக்களை பதிவிட்டார். இதைபார்த்தவர்கள், ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் டிரெய்லரை கார்த்திக் குமார் கிண்டல் செய்துள்ளார்.
அதனை வெங்கட்பிரபு தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டதன் மூலம் ஆதரித்து இருக்கிறார் என்றும், இதன் மூலம் இவர் மறைமுகமாக கூலி டிரெய்லரை கேலி செய்துள்ளார் என்றும் பதிவிட்டனர். இந்நிலையில், வெங்கட் பிரபு இதற்கு விளக்கம் அளித்து வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,
No no no!!! It’s about all of us who are doing commercial flick!! And what he is sayings is kinda true too!! If we try to give something different from the regular commercial template!! are the fans ready to accept 🤔
— venkat prabhu (@vp_offl) April 28, 2024
“இல்லவே இல்லை. இது என்னை போன்ற கமர்சியல் படங்கள் எடுக்கும் எல்லா இயக்குனர்களுக்கும் பொருந்தக்கூடிய கருத்துத்தான். கார்த்திக் குமார் சொல்வது ஒருவகையில் உண்மைதான். கமர்சியல் படங்களை ஒரே மாதிரியாக எடுப்பதை அவர் விமர்சித்துள்ளார். வழக்கமான கமர்சியல் படங்களாக இல்லாமல் வித்தியாசமான படங்களை நாங்கள் கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்களா?” என ரசிகர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
கூலி டிரெய்லரை இயக்குனர் வெங்கட்பிரபு கலாய்த்து விட்டதாக ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்த நிலையில், தற்போது வெங்கட்பிரபு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நான் இன்னொரு புதினா? – சரத்பவாருக்கு மோடி பதில்!