‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீட்டு விழா ஜூலை மாதத்திலிருந்து தள்ளிப் போயுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, விக்ரம், ‘ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
இது, மறைந்த எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையாகும். தமிழ் சினிமாவின் கனவு படமான இதை மணிரத்தினம் இரண்டு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார். இதன் முதல் பாகம் செப்டம்பரில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கதாபாத்திர அறிமுகம் தொடர்பான போஸ்டர்களும் வெளியாகின. படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் ஜூலை முதல் வாரத்தில் அதாவது ஜூலை 7ஆம் தேதி தஞ்சாவூரில் மிகப் பிரமாண்டமாக டீசர் வெளியீட்டு விழா மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என செய்திகள் வெளியாகின.
ஆனால் இப்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது. டீசர் வெளியாகும் என செய்திகள் வெளியான ஜூலை 7ஆம் தேதி டீசருக்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஜூலை மாத இறுதியில் டீசர் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிரா