பொதுவெளியில் முத்தம்: ஸ்ரேயா பதில்!

சினிமா

தனுஷ், விக்ரம், ஜெயம்ரவி ஆகியோர் நடித்த படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா.

ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகுந்த பிரபலமானார் ஸ்ரேயா. ’இந்திரலோகத்தில் அழகப்பன்’ படத்தில் வடிவேலுவுடன் தனி நடனம் ஒன்றில் ஸ்ரேயா நடனமாடினார்.

அதன் பின் அவருக்குத் தமிழில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

ஸ்ரேயா நடித்துள்ள இந்திப் படமான ‘த்ரிஷ்யம் 2’ படம் கடந்த வாரம் வெளியாகி 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. அந்தப் படத்திற்கான சிறப்புக் காட்சி ஒன்றில் ஸ்ரேயா, அவரது கணவர் ஆன்ட்ரேய் கோஸ்சீவ் இருவரும் பொதுவெளியில் முத்தமிட்டுக் கொண்டனர்.

actress shriya explains about her kiss moment with her husband

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. பொது இடத்தில் இப்படி முத்தமிட்டுக் கொள்வது சரியா என்று விமர்சனங்களும் எழுந்தது. ஸ்ரேயாவின் கணவர்வ்ஆன்ட்ரேய் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்.

இந்த முத்த சர்ச்சை குறித்து ஸ்ரேயா கூறுகையில், “இது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. சிறப்பான தருணங்களில் ஆன்ட்ரேய் எனக்கு முத்தம் கொடுப்பது சாதாரணமான ஒன்று.

அது சிறப்பானது என நான் கருதுகிறேன். ஒரு இயல்பான விஷயத்திற்காக ஏன் ‘டிரோல்’ செய்கிறார்கள் என எனக்குப் புரியவில்லை. நான் மோசமான கமெண்ட்டுகளைப் படிப்பது கூட இல்லை.

அப்படி எழுதுவது அவர்கள் வேலை. அதைத் தவிர்ப்பது எனது வேலை. எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை நான் செய்வேன்,” என்று விளக்கமளித்துள்ளார்.

மோனிஷா

மின் கட்டணம்: ஆதார் இணைப்பதற்கு அவகாசம் நீட்டிக்கப்படுமா?

FIFA WorldCup : ஜப்பானிடம் சரிந்த ஜெர்மனி… வீரநடைபோடுமா? வீட்டுக்கு செல்லுமா?

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *