நோலனின் “JAMES BOND” படத்துக்கு நீங்க ரெடியா? முழு விவரம் இதோ!

Published On:

| By Monisha

Christopher Nolan to direct James Bond films

Sci-Fi படங்களின் மாஸ்டர் என்று சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான “Oppenheimer” திரைப்படம் உலகம் முழுவதும் மெகா ஹிட் அடித்து $900 மில்லியன் வசூலித்தது.

இந்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்து நோலன் எந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில், நோலனின் அடுத்த படம் குறித்த ஒரு செம ரூமர் காட்டுத்தீ போல் ஹாலிவுட்டில் பரவி வருகிறது.

அது என்னவென்றால் உலக புகழ்பெற்ற “ஜேம்ஸ் பாண்ட்” சீரியஸில் கிறிஸ்டோபர் நோலன், 2 ஜேம்ஸ் பாண்ட் படங்களை இயக்க போவதாக கூறப்படுகிறது. EON productions நிறுவனத்திற்கும் கிறிஸ்டோபர் நோலனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கிறிஸ்டோபர் நோலன் சில நேர்காணல்களில் கூறி இருப்பதால் நிச்சயம் இந்த ப்ராஜெக்ட் டேக் ஆஃப் ஆகும் என்று கருதப்படுகிறது.

ஒருவேளை நோலன் “ஜேம்ஸ் பாண்ட்” படங்களை இயக்க ஒப்புக்கொண்டால், நோலனின் “Batman Trilogy” படங்களுக்கு எப்படி ஒரு தனி பேன் பேஸ் உள்ளதோ, அதேபோல நோலனின் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கும் தனி பேன் பேஸ் உருவாகிவிடும்.

நோலனின் “JAMES BOND” படத்துக்கு நீங்க ரெடி என்றால் ஒரு லைக் போட்டு உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்..

– கார்த்திக் ராஜா

அரண்மனை 4 ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஏலியனா? பேயா? வெற்றி யாருக்கு?

உறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share