நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ரிலீஸ் எப்போது?

சினிமா

நடிகர் வடிவேலு மறுபிரவேசம் செய்யும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் காமெடி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தை இயக்குநர் சுராஜ் இயக்கியுள்ளார்.

naai sekar returns release date announced lyca productions

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் ராவ் ரமேஷ், ஆனந்த்ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி கிருஷ்ணகுமார், ஷிவானி நாராயணன், ‘லொள்ளு சபா’ மாறன், மனோபாலா,உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த 14-ம் தேதி சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு குரலில் ‘அப்பத்தா’ பாடல் வெளியானது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு குரலில் வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

தமிழகத்தை தாண்டக் கூடாது : ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவு!

FIFA WorldCup : ஜப்பானிடம் சரிந்த ஜெர்மனி… வீரநடைபோடுமா? வீட்டுக்கு செல்லுமா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.