நடிகை நயன்தாராவின் ‘9skin’ என்கிற அழகு சாதன பொருட்கள் நிறுவனம் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நயன்தாரா, ‘ஒவ்வொரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன் என் கண் புருவங்களை அழகுபடுத்திக் கொள்வது எனது வழக்கம்.
அதனால் என் முகத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டது போலத் தெரியும். அதனால் தான் என் முகம் வித்தியாசமாகத் தெரிகிறது என மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அது உண்மை அல்ல. என் உடல் எடையில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எனது கன்னங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனது கன்னத்தை கிள்ளியும் பார்க்கலாம், எரித்தும் பார்க்கலாம். நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை’ எனப் பேசியுள்ளார்.
நடிகை நயன்தாரா தற்போது இயக்குநர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகும் ‘டெஸ்ட்’, இயக்குநர் டியூட் விக்கி இயக்கத்தில் உருவாகும் ‘மண்ணாங்கட்டி’ , கன்னட நடிகர் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் – 2’, மலையாள நடிகர் நிவின் பாலியுடன் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ ஆகிய திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.
சமீப காலமாக முன்னணி நடிகைகள் தங்களின் அழகை அதிகரிக்க, தக்கவைத்துக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்து வருவதாக பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகை ஆலியா பட் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதால் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி கூட சமீபத்தில் வைரலானதை இணையத்தில் கண்டிருப்போம். ஆனால், அதை நடிகை ஆலியா பட் முற்றிலும் மறுத்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா