தமிழ் சினிமாவிலும் பாலியல் வன்கொடுமை நடக்கிறது என்ற நடிகை ஊர்வசியின் குற்றச்சாட்டையடுத்து, விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகை ஊர்வசி மலையாள திரையுலகில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றிய ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து பேசினார்.
அப்போது, எல்லா மாநிலத்திலும் பெண் மீதான பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. ஆனால், கேரளாவில்தான் பெண்கள் அதைத் துணிச்சலாக எதிர்கொள்ள முன்வந்தனர். எதிர்த்து குரல் கொடுத்தனர். அங்கே முற்போக்கான பெண்கள் அதிகம் உள்ளதால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழ் சினிமாவிலும் இதே மாதிரியான பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. ஆனால், அதை வெளிப்படையாகப் பேச யாரும் முன்வரவில்லை. அதே மாதிரி தைரியமான பெண் யாரும் தமிழ் சினிமாவில் இல்லை. அதனால் இங்கே எதுவுமே நடக்கவில்லை எனச் சொல்ல முடியாது என்று கூறியிருந்தார்.
இதனால், தமிழ் சினிமா மட்டும் என்ன ஒழுங்கா? இங்கும் நடிகைகளுக்கும், துணை நடிகைகளுக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்னை இருந்துகொண்டுதான் இருக்கிறது. இதை யார் தடுப்பது போன்ற குரல் எழுந்துள்ளது.
இந்தநிலையில் நடிகர் விஷால் இந்த விவகாரம் குறித்து இன்று(ஆகஸ்ட் 29) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எவனோ ஒருவன் பெண்ணை மதிக்காமல் பைத்தியக்காரத்தனமாக அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிடுவான். இதையெல்லாம் தவிர்க்க ஒரே வழி என்னவென்றால் அந்தப் பெண்ணுக்கு மன தைரியம் வேண்டும். அப்படி கூப்பிடுபவனை அந்தப் பெண் செருப்பால் அடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டிலும் நடிகர் சங்கம் சார்பாக 10 பேர் கொண்ட குழுவை அமைக்கிறோம். அதற்கான வேலைகள் போய்க்கொண்டிருக்கின்றன. இது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வரும். அது எங்களது கடமை. நடிகர் சங்கம் ஆண்களுக்கானது மட்டுமில்லை. பெண்களுக்குமானதுதான்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஹேமா கமிஷன் அறிக்கை : உடைத்து பேசிய ஊர்வசி
10 மாநிலங்களில் 12 தொழில் நகரங்கள் : உபிக்கு இரண்டு – தமிழகத்தில்?