சத்யராஜ் நடித்துள்ள சயின்ஸ் பிக்ஷன் படம் ‘வெப்பன்’. இதில், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
மில்லியன் ஸ்டூடியோ புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரித்துள்ள இந்தப் படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி மே 17ஆம் தேதி இரவு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், படம் பற்றி குகன் சென்னியப்பன் கூறுகையில், “சூப்பர் ஹ்யூமன் விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு சயின்ஸ் பிக்க்ஷன், ஆக்சன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை பல திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான கதை இதில் இருக்கும். சத்யராஜ் முதன்முறையாக, சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்றார்
நடிகர் வசந்த் ரவி பேசுகையில், “தமிழில் சூப்பர் ஹூ்யூமன் கதைகளை எடுத்து செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதை இயக்குநர் குகன் விரும்பி செய்திருக்கிறார். சின்ன வயதில் இருந்தே நிறைய காமிக்ஸ் கதைகளை அவர் படித்து வளர்ந்ததால் சினிமாவில் அதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முதல்படியாக ‘வெப்பன்’ படத்தை எடுத்திருக்கிறார்.
இந்த மாதிரியான படங்களுக்கு பெரிய பட்ஜெட் தேவைப்படும். படத்தின் டிரெய்லரை நெல்சனிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டினேன். ‘டிரெய்லர் ரொம்ப நல்லாருக்கு. இதுபோன்ற ஃபேண்டஸி ஆக்ஷன் படம் வந்து ரொம்ப நாள் ஆச்சு என்றார்.
’ராக்கி’ படத்தில் பாரதிராஜா சாருடன் நடித்தேன். பின்பு, ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி சாருடன் நடித்தேன் இருவரிடமும் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேனோ அதேபோலதான், சத்யராஜ் சாரிடமும் நிறையக் கற்றுக் கொண்டேன். மனதில் இருக்கும் எதையும் வெளிப்படையாக சொல்லி விடுவார். அவர் எவ்வளவோ படங்கள் நடித்தி்ருந்தாலும் இந்த படம் அவரது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாததாக இருக்கும்.
நான் எவ்வளவோ ஜானர்களில் படங்கள் செய்து இருந்தாலும் சூப்பர் ஹூயூமன் என்பது புது ஜானர். ஹாலிவுட் படங்களைப் போல இந்தப் படத்தைப் பாருங்கள். இது ப்ரீகுவல்தான். குகன் இந்த கதைக்கு ஒரு யுனிவர்ஸே வைத்துள்ளார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
நடிகர் சத்யராஜ் பேசுகிற போது, “திரையில காட்டுவதை விட, தரையில வீரத்தைக் காட்டுவதுதான் சூப்பர் ஹீரோ. இந்த மாதிரி படத்திற்கு அதிக பட்ஜெட் தேவைப்படும். படத்தின் கதையை நம்பி மட்டுமே இவ்வளவு பட்ஜெட் தயாரிப்பாளர் மன்சூர் செய்துள்ளார். இந்தப் படத்தின் இரண்டு ஹீரோக்களாக நான் நினைப்பது தயாரிப்பாளர் மன்சூரையும் இயக்குநர் குகனும்தான். தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் ரொம்ப ஸ்டிராங்க். கட்டப்பா போல இந்தப் படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் காலத்தால் அழியாத ஒன்றாக இருக்கும்” என்றார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராகுல் காந்தி பிரதமர் ஆவாரா? பிரியங்கா பதில்!
ஹெல்த் டிப்ஸ்: எனக்கு எதற்கு உடற்பயிற்சி என்று நினைப்பவரா நீங்கள்?