சிக்கிய வலுவான ஆதாரங்கள் : கொச்சியில் மறுப்பு, டெல்லிக்கு ஓட்டம் பிடித்த நடிகர் சித்திக்

சினிமா

பாலியல் வழக்கில் ஜாமின் கோரி, மலையாள நடிகர் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், பட  வாய்ப்புகளுக்காக பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், பெரிய நடிகர்கள் கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கைக்கு பின், பல நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேசத் துவங்கினர். பிரபல மலையாள நடிகர் சித்திக் 2016  ஆம் ஆண்டு  தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார், நடிகர் சித்திக்கிற்கு எதிராக பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். அந்த வகையில் 23 வழக்குகளை சிறப்பு போலீசார் குழு பதிவு செய்துள்ளது.

இதில், சித்திக் மீதான வழக்கில் வலுவான  ஆதாரங்களை போலீசார் எடுத்து விட்டதாக  தெரிகிறது. ஹோட்டலில் நடந்த சாட்சிய சேகரிப்பில், சித்திக் மற்றும் புகார் அளித்த இளம் நடிகையும் ஒரே காலகட்டத்தில் ஹோட்டலில் தங்கியிருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.

இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி, சித்திக் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அதேவேளையில், கொச்சி கிரைம் பிரான்ச் பிரிவு தலைவர் ஸ்ப்ரஜன்குமார், நடிகர் சித்திக்கை கைது செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல, வெளிநாடுகளுக்கு தப்பி விடக் கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் லுக்அவுட் நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, சித்திக் கக்கநாட்டிலுள்ள அவரின் வீட்டில் இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர் டெல்லிக்கு தப்பிச்சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

10 மாதங்களுக்கு பிறகு துரை தயாநிதி டிஸ்சார்ஜ்

பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை… இயக்குனர் மோகன் ஜி கைது!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *