கோட் படம்: விஜய்க்கு முதல் ஆளாக வாழ்த்து சொன்ன அஜித்

Published On:

| By Kumaresan M

கோட் படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று  அந்த படத்துக்கு தமிழக அரசு  சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்தது.

காலை 9 மணிக்கு தொடங்கி மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில் மட்டும் 5 காட்சிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் அஜித் விஜய் ரசிகர்கள் மோதல் இருந்தாலும், நிஜத்தில் விஜய் மற்றும் அஜித் இருவரும் உண்மையில் நல்ல நண்பர்கள். உச்ச நடிகர்கள் இருவரின் நட்பை பலமுறை உலகத்திற்கு எடுத்து காட்டியவர்  இயக்குனர் வெங்கட் பிரபு .

தற்போது விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கியுள்ள  கோட்  படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெற்றி பெற, அஜித்  முதல் ஆளாக விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார். அதற்கு வெங்கட் பிரபு தான் அஜித், விஜய்யுடன்  இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா என முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நடிகை சினேகா இப்படத்தில் விஜய்யின் ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே வசீகரா திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

தற்போது, 21 ஆண்டுகள்  கழித்து மீண்டும் கோட்  படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார். கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க நடிகை சினேகா ரூ. 75 லட்சம் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

பிரபல கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி கோட்  படத்தை முதல் நாள் பார்க்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் டிக்கெட் கிடைக்கவில்லை என்று தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

சிகாகோவில் புதிய முதலீடுகளை ஈர்த்த முதல்வர்: எந்த நிறுவனம்? எவ்வளவு கோடி?

தங்கம் விலை: ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?