கொலை மிரட்டல் : சல்மானுக்கு பாதுகாப்பு!

சினிமா

சித்து மூஸ்வாலாவைப் போல கொல்லப்படுவீர்கள்” என்று சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கானுக்கு அனாமதேய மிரட்டல் கடிதம் ஒன்று வந்ததன் காரணமாக அவரது குடும்பத்திற்கான பாதுகாப்பு

பலப்படுத்தப்பட்டுள்ளதுமும்பையின் பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் பகுதியில் நடிகர் சல்மான் கானின் தந்தையும் மூத்த எழுத்தாளருமான சலீம் கான் நேற்று அதிகாலை வழக்கமான நடைபயணத்திற்கு பிறகு பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்துள்ளார். அங்கு ஒரு கடிதம் இருக்கவே, அதை எடுத்து படித்துள்ளார் சலீம் கான். அதில் தனக்கும் தன் மகனுக்கும் கொலை மிரட்டல் இருந்ததை பார்த்து அதிர்ந்து போயுள்ளார் சலீம் கான்.

அந்த கடிதத்தில் “சலீம் கான் சல்மான் கான் பஹோத் ஜல்ட் துமாஹ்ரா மூஸ்வாலா ஹோகா கே.ஜி.பி.எல்.பி” என்று எழுதப்பட்டு இருந்தது. அதாவது சலீம் கான், சல்மான் கான் இருவரும் சித்து மூஸ்வாலாவை போல இருவரும் கொல்லப்படுவீர்கள் என்பது பொருளாகும்இதையடுத்து காவல்துறையிடம் சலீம் புகார் அளிக்கவே, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ‘கிரிமினல் மிரட்டல்’ குற்றமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பஞ்சாபி பாடகரும் அரசியல்வாதியுமான சித்து மூஸ் வாலா கடந்த வாரம் பஞ்சாபின் மான்சா கிராமத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2018-ம் ஆண்டு மான் வேட்டையாடிய வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது சல்மான் கானை அந்தக் கும்பல் மிரட்டியது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், மூஸ் வாலாவின் கொலை பற்றிய குறிப்புகளுடன் கூடிய கடிதத்திற்குப் பிறகு, நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கியிருக்கும் பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புகளைச் சுற்றி நகர காவல்துறை பாதுகாப்பை கடுமையாக்க முடிவு செய்துள்ளது.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *