இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கிரைம் காமெடி திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜப்பான்.
ஜப்பான், நடிகர் கார்த்தியின் 25வது படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ரவி வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அனு இமானுவேல் நடித்திருக்கிறார்.
ஜப்பான் படத்திற்காக நடிகர் கார்த்தி தனது வழக்கமான ஸ்டைலில் இருந்து முற்றிலும் மாறுபட்டு உடல் மொழி, குரல் என அனைத்தையும் மாற்றி ஜப்பான் என்ற கதாபாத்திரமாகவே உருமாறி நடித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்டர்களும், க்ளிம்ப்ஸ் வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இன்று(அக்டோபர் 18) ஜப்பான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஜப்பான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்தி ஒரு மிகப்பெரிய கொள்ளைக்காரன் என்ற அறிமுகத்தோடு மாஸாக டீசர் தொடங்குகிறது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜூ முருகன் ஜப்பான் படத்தை இயக்கியிருக்கிறார். ஆச்சரியப்படுத்தும் வகையில் செம ஆக்சன் காட்சிகளோடு இந்த படத்தை உருவாகியிருக்கிறார் ராஜூ முருகன்.
“எத்தனை குண்டு போட்டாலும் இந்த ஜப்பானை அழிக்க முடியாது டா..”
என்று டீசரின் இறுதியில் இடம்பெற்றுள்ள வசனம் “அல்டிமேட்”. ஜப்பான் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தியின் ஜப்பான் படம் ஒரு வித்தியாசமான ஆக்சன் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர தொடங்கிவிட்டனர்.
– கார்த்திக் ராஜா
“விஜய் படம் என்றாலே ஏதோ ஒரு பிரச்சினை” : லோகேஷ் கனகராஜ்
ரோகிணி தியேட்டரில் லியோ வெளியாகுமா?
மருத்துவமனை தாக்குதல் இஸ்ரேல் செய்யவில்லை- ஐஎஸ்ஐஎஸ் சை விட கொடியது ஹமாஸ்: அமெரிக்க அதிபர்
மருத்துவமனை பிளாட்பாரத்தில் மயக்க மருந்து இல்லாமல் ஆபரேஷன்: காசா கொடுமை!