ஏகே 61 இறுதிகட்ட படப்பிடிப்பு எங்கு நடைபெறுகிறது தெரியுமா?

சினிமா

நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், மீண்டும் இயக்குனர் ஹெச். வினோத்துடன் அஜித் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம்சிட்டியில் ஒரு மாதமாக நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் போது, நடிகர் அஜித் வெளிநாடு சென்றார். அதனால் மற்ற நடிகர்களை வைத்து எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை இயக்குனர் வினோத் எடுத்து முடித்தார். சென்னை திரும்பிய அஜித், படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திருச்சி துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு 4 தங்க பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள் வென்றார்.

இந்தநிலையில் ஏகே 61 படத்தின் மூன்றாவது மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் இன்று (ஆகஸ்ட் 16) முதல் துவங்க உள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித் விசாகப்பட்டினம் சென்றுள்ளார். செப்டம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  படத்தை பற்றிய அப்டேட் இதுவரை வெளியாகாததால், அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் சென்றுள்ள, அஜித் தனது ரசிகர்களுடன் விமான நிலையத்தில் வைத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது ட்விட்டரில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

செல்வம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0