என்னால முடியாதா? நெப்போலியன் மகன் வெளியிட்ட வீடியோ

Published On:

| By Kumaresan M

நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  அமெரிக்காவில் ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நெப்போலியன் பலருக்கும் வேலை வாய்ப்பு வழங்கி வருகிறார்.

நெப்போலியனின் மூத்த மகன் தனுசுக்கு தசை சிதைவு பாதிப்பு நோய் உள்ளது. தற்போது அவருக்கு 24 வயது ஆகிவிட்ட நிலையில் திருமணம் செய்ய நெப்போலியன் முடிவெடுத்தார்.  திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த பெண் ஒருவரோடு தனுசுக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதத்தில் ஜப்பானில்  திருமணம் நடைபெற உள்ளது.  ஆனால், இந்த செய்தி வெளியானதுமே பலரும் நெப்போலியன் மகனால் திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியாது, பணம் இருக்கிறது என்பதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கிறார்கள் என்று விமர்சித்தனர்.

இந்த நிலையில் தனுஷ் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் சமீப காலமாகவே என்னைப் பற்றி பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். நான் இணையத்தில் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னை பற்றி சிலர் நெகட்டிவாக பேசினாலும் நான்  மோட்டிவாகவே எடுத்துக் கொள்கிறேன்.

ஆனால் என்னால் முடியாது என்று சிலர் சொல்வதை கேட்கும் போது நான்,  ஜெயிச்சு காட்டணும் என்று நினைக்கிறேன். என்னை மாதிரி இருக்கிறவங்க இதை பண்ண முடியாது, அதை பண்ண முடியாதுன்னு நிறைய பேரு சொல்லுவாங்க. அதையெல்லாம் நீங்க கேட்காதீங்க. விடா முயற்சியுடன் இருந்தால் எப்போதுமே வெற்றி பெற முடியும் என்று பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 பிக் பாஸ் – 8: டஃப் கொடுக்கும் ஆண்கள்… குழப்பத்தில் தவிக்கும் பெண்கள் அணி!

சாம்சங் தொழிலாளர்கள் கைது : நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel