சுந்தர்.சி இயக்கிய “அரண்மனை” சீரிஸ் படங்களுக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அரண்மனை 1,2 படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
ஆனால், ஆர்யா நடிப்பில் வெளியான அரண்மனை 3 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இருந்தாலும், அந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸில் அதிகமாக வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட் பட்டியலில் இணைந்தது அரண்மனை 3.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அரண்மனை 4 படம் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருப்பதாக அறிவைக்கப்பட்டது.
முதலில் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சந்தானம் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், சில காரணத்தினால் விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவிக்க, மெயின் ஹீரோவாக சுந்தர்.சி நடிப்பார் என தகவல் வெளியானது. அரண்மனை 4 படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, VTV கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதன்பிறகு அரண்மனை 4 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை குஷ்பூ வெளியிட்டார். அந்த போஸ்டரில்
2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அரண்மனை 4 திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பொங்கலுக்கு அயலான், கேப்டன் மில்லர் போன்ற படங்கள் வெளியானதால் அரண்மனை 4 ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரண்மனை 4 படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் சுந்தர். சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குஷ்பு இந்த படத்தை தயாரிக்க, ஹிப் ஹாப் ஆதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அரண்மனை 2 படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரண்மனை 1 மற்றும் 2 படங்களின் ஹன்சிகா பேய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அரண்மனை 3 படத்தின் ஆண்ட்ரியா பேய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அரண்மனை 4 படத்தில் தமன்னா பேய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அரண்மனை சீரிஸில் இந்த படமும் மிக பெரிய வெற்றி படமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரூ.6,999 விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் Poco C61
விசிகவுக்கு பானை சின்னம் கிடைக்குமா? – டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!