விஜய்யின் 66 ஆவது படம் வாரிசு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில்ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் வஞ்சி பைடிப்பள்ளி இயக்குகிறார்.
இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அகிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
ஏப்ரல் 6 அன்று வாரிசு படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி விஜய்க்காக முதன்முறையாக ஒரு புதிய கதையைப் புத்திசாலித்தனமான தொழில்நுட்பத்தில் உருவாக்கிக் கொண்டிருப்பதாக இயக்குநர் வட்டாரம் கூறி வருகிறது.
2023 பொங்கல் திருநாளில் வாரிசு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் திரையரங்க வெளியீட்டிற்குப் பின்னான ஓடிடி ஒளிபரப்பு உரிமை ஆகியவற்றின் வியாபாரம் முடிக்கப்பட்டுள்ளது.
வாரிசு படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமையை அமேசான் நிறுவனமும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சியும் பெற்றிருக்கிறது.
தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளுக்கான ஓடிடி உரிமை மட்டும் நூறு கோடி ரூபாய் என்றும் இதே நான்கு மொழிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சுமார் 67 கோடி ரூபாய் என்றும் வியாபாரம் முடிந்துள்ளது.
விஜய் கதாநாயகனாக நடித்து இதுவரை வெளியான எந்தப்படமும் இதுபோன்று அதிகப்படியான விலைக்கு வியாபாரம் ஆனதில்லை.
இராமானுஜம்