கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களையிழந்த நிலையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுவதுடன் பொது இடங்களிலும் பல்வேறு வகையான,வித்யாசமான விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்தியா முழுவதும் பல்வேறு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் புஷ்பா பட விநாயகர், ஆர்ஆர்ஆர் விநாயகர், ஜெயிலர் பட விநாயகர் என பல்வேறு வகையிலான சிலைகள் கவனத்தை ஈர்த்துள்ளன.
அதன் தொகுப்பு….
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண்,ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
படத்தின் சண்டைக்காட்சி ஒன்றில் ராம்சரண் வில் அம்பை ஏந்தி சண்டை செய்திருப்பார்.
பலராலும் கொண்டாடப்பட்ட இந்த கட்சியை வைத்து விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன
இதே போல அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. அதன் சிலைகளும் தற்போது அதிக இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

கே.ஜி.எப் விநாயகர்

ரஜினியின் ஜெயிலர் விநாயகர்

இதை தவிர காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் அமைந்துள்ள “ஏலேல சிங்க விநாயகர்” 10 முதல் 2000 வரையிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.
நோட்டுகளின் மதிப்பு ரூ.15 லட்சம்..

100 கிலோ பூந்தியால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை – தியாகராய நகர்

கொளத்தூரில் கலசத்தால் வடிவமைக்கப்பட்ட விநாயகர்

க.சீனிவாசன்
பல்வேறு நிபந்தனைகளுடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி!