அமெரிக்கா மற்றும் ரஷ்ய உளவுத்துறைகளின் தலைவர்கள் இருவரும் மார்ச் 11 ஆம் தேதி போனில் உரையாடிக் கொண்ட சம்பவம், உலக நாடுகளிடையே விவாதிக்கப்படும் விஷயமாக மாறியிருக்கிறது. CIA Director Russia spy chief phone call
அமெரிக்க புதிய அதிபராகியிருக்கும் டிரம்ப் ரஷ்யாவுக்கும் – உக்ரைனுக்கும் வருடக் கணக்கில் நடந்து வரும் போரை நிறுத்த முயற்சி செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் நடத்திய உரையாடல் உலக அளவில் சர்ச்சையானது.
இந்நிலையில்… ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்களைத் தணிக்கும் முயற்சியின் முக்கிய அம்சமாக, இரு நாட்டு உளவுத் தலைவர்களும் போனில் உரையாடியிருக்கிறார்கள்.
அமெரிக்க உளவுத் துறையான CIA (Central Intelligence Agency) இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் மற்றும் ரஷ்யாவின் வெளிநாட்டு உளவுத்துறை சேவை (SVR – Sluzhba Vneshney Razvedki) தலைவர் செர்ஜி நரிஷ்கின் ஆகியோர் முக்கியத்துவம் வாய்ந்த போன் உரையாடலை நடத்தியதாக ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட 30 நாள் போர்நிறுத்தத்திற்கு உக்ரைன் ஆதரவளித்ததுடன், சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சு நடத்த உக்ரைன் தயாரானது. இந்த நிலையில்தான் அமெரிக்க, ரஷ்ய நாடுகளின் உளவுத் தலைவர்களின் போன் உரையாடல் நடந்திருக்கிறது. CIA Director Russia spy chief phone call
CIA மற்றும் SVR தலைவர்கள் கடைசியாக நவம்பர் 2022 இல் துருக்கி நாட்டின் அங்காராவில் சந்தித்தனர். அப்போதைய CIA இயக்குனர் வில்லியம் பர்ன்ஸை ரஷ்யாவின் SVR தலைவர் நரிஷ்கின் சந்தித்தார். ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு குறித்த உச்சக்கட்ட பதற்றத்தின் போது அந்த சந்திப்பு அணுசக்தி ஆபத்து மேலாண்மை தொடர்பாக நடைபெற்றது.
டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு ரஷ்ய – அமெரிக்க உளவுத் தலைவர்களின் முதல் உரையாடல் இது என்பதால் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்க, ரஷ்ய உளவுத் துறைத் தலைவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை அறிய சீனா பெரும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. CIA Director Russia spy chief phone call