நூற்றாண்டுகள் தொடர்ந்த கொண்டாட்டம்: கிறிஸ்துமஸ் இல்லாத நாட்ரிடாம் சர்ச்!

Published On:

| By Balaji

பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இல்லாமல் பாரீஸின் நாட்ரிடாம் சர்ச் களையிழந்து காட்சியளிக்கிறது.

கோதிக் கலை கட்டட வடிவமைப்புக்கு அடையாளமாக விளங்கும் நாட்ரிடாம் சர்ச் மிகுந்த கலை வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் பேர் இங்கு வந்து செல்கின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இந்த தேவாலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பாரீஸின் மைல் கல்லாக இது திகழ்ந்தது. இத்தனை பாரம்பரியம் மிக்க இந்த தேவாலயம் பெரும் இழப்பைச் சந்தித்து களையிழந்து, கிறிஸ்துமஸ் மறந்து நிற்கிறது.

ADVERTISEMENT

கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. மரத்தால் ஆன சர்ச்சின் மேற்கூரை முழுவதும் தீ பற்றி எரிந்தது. பாரீஸ் நகரின் வானில் தீ சுவாலையும், கரும்புகையும் சூழ்ந்துகொண்டது. அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு ஓடிவந்து செய்வதறியாது பார்த்து நின்றனர். அந்த விபத்தில் முழுவதும் சேதமடைந்த தேவாலயம் மூடப்பட்டது. பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டதன் பின்னர் முதன்முறையாக கிறிஸ்துமஸ் இல்லாத நாட்ரிடாம் சர்ச் வண்ணவிளக்குகளும் அலங்காரங்களும் இன்றி காணப்படுகிறது.

மீண்டும் இதை உயிர்ப்புடன் மீட்டெடுக்க நிர்வாகிகள் கடுமையாக வேலை செய்து வருகின்றனர்.,”

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share