சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்!

Published On:

| By Selvam

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பெளர்ணமி கிரிவலம் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனையடுத்து திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23 ஆகிய நாட்களில் சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சித்திரா பௌர்ணமியை  ஒட்டி திருவண்ணாமலைக்கு அதிகளவில் பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து ஏப்ரல் 22 அன்று 527 பேருந்துகளும் மற்றும்  ஏப்ரல் 23 அன்று 628 பேருந்துகளும் இயக்கப்படும். அதேபோல, சென்னை மாதவரத்திலிருந்து ஏப்ரல் 22  அன்று 30 பேருந்துகளும் ஏப்ரல் 23 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22 அன்று 910 பேருந்துகளும் ஏப்ரல் 23 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

ADVERTISEMENT

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: சொட்டு சொட்டாக சிறுநீர் பிரச்சினைக்கு எளிய தீர்வு!

கோவையில் 1 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கமா? – தேர்தல் அலுவலர் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share