ஆவணி மாத நட்சத்திர பலன் – சித்திரை!  (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

Published On:

| By Selvam

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

நிதானத்தால் நிம்மதியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும்.

மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள்.

எதிர்பாராத வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் தவிர்க்காமல் ஏற்றிடுங்கள்.

பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடாது.

வீட்டில் நிதானத்தைப் பேச்சில் கடைபிடித்தால், நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத்துணையால் சீரான நன்மைகள் கிட்டும். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம். கடன் தருவது, பெறுவதை உடனுக்குடன் எழுதி வையுங்கள். குடும்ப விஷயங்களை வெளியிடத்தில் பேசவேண்டாம்.

செய்யும் தொழிலில் லாபம் சீராகும். உங்களிடம் பணிபுரியும் யாரிடமும் வீண் தகராறு வேண்டாம். ரசாயனத் தொழிலில் நிதானம் முக்கியம்.

அரசியல்வாதிகள் அமைதியாக இருப்பதே நல்லது.

சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கப் பணியில் உள்ளோர் சீரான நன்மைகளைப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும்.

படைப்பாளிகள். வாய்ப்புகளை வரிசையாகப் பெறுவீர்கள்.

பயணத்தில் கவனச் சிதறல் கூடாது.

காது, மூக்கு, தொண்டை, அல்சர் உபாதைகள் வரலாம்.

தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வை ஆதரித்தது ஏன்?” – எடப்பாடியை சாடிய சிவசங்கர்

ஆவணி மாத நட்சத்திர பலன் – ஹஸ்தம்!  (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share